பக்கம்:பாரும் போரும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. தோற்றுவாய்

சிறு மீன் ஒன்று பொற்றகடுபோல் ஒரு குளத்தில் மெல்ல நீந்திச் சென்று கொண்டிருந்தது. எதிரே ஒரு பெரிய மீன் வந்தது. சிறுமீனைக் கண்டதும், அதை விழுங்குவதற்குப் பெரிய மீன் வாயைத் திறந்தது. அதைக்கண்டு அச்சமுற்ற சிறு மீன், "இது என்ன கொடுமையாக இருக்கிறது? நாம் இருவரும் ஓரினமாயிற்றே! இனத்தை இனம் விழுங்குவது சரியா? முறையா? அறமா?' என்று அரற்றத் தொடங்கியது.

"அப்படியானால் நீ என்னை விழுங்கு" என்று பெரிய மீன் கூறியது. சிறு மீன் வாயைத் திறந்து, பெருமீனை விழுங்க முயற்சித்தது; ஆனால் முடியவில்லை.

"சரி! நீயே என்ன விழுங்கிவிடு" என்று சிறுமீன் கூறியது. பெரிய மீன் உடனே விழுங்கிவிட்டது.

உலகச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற கதை இது. இதை எழுதியவர் ஓர் உருசிய எழுத்தாளர். இக்கதை, அளவில் சிறியதாகவும், பிஞ்சுள்ளம் கொண்ட சிறுவர்களின் உளப் பாங்கிற்கு ஏற்றதாகவும் தோன்றும். ஆனால், இக்கதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/8&oldid=1407135" இலிருந்து மீள்விக்கப்பட்டது