பக்கம்:பாரும் போரும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 வாக்கையும் கண்டு, தங்களுக்கும் இடையூறு நேருமோ என்று அஞ்சிய பிரசியாவும், உருசி யாவும் திடீரென்று பிரான்சைத் தாக்கின. ஒரு திங்களில் இவ்விரு படைகளையும் நெப் போலியன் முறியடித்தான். போர்ச்சுகல், ஸ்புெ யின் நாடுகளையும் வென்று தன்னடிப்படுத்தி ன்ை. ஆஸ்திரியர்களை மறுபடியும் இரேட்டிஸ்பன் என்ற விடத்திலும் தோற்கடித்து அவர்கள் கோட் டையைக் கைப்பற்றினன். இப்போர் மிகவும் போற் றத் தகுந்ததாகும். கோட்டைக்குள் முதலில் நுழைய ஐம்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மதில் மேலிருந்த ஆஸ்திரியர்களால் சுட்டு வீழ்த் தப்பட்டனர். மறுபடியும் ஐம்பது பேர் பலியாயினர். அப்பிரெஞ்சு வீரர்களின் தன்னலமற்ற உயிர்க் கொடை வெல்ல முடியாத அக்கோட்டையை எளி தில் வெல்லுமாறு செய்தது. நெப்போலியனின் வீரத்தையும், ஆட்சித் திறமை யையும் போற்றி, பிரெஞ்சு மக்கள் நெப்போலி யனேயே மன்னனுக்க விரும்பினர். நெப்போலிய னும் அதற்கிசைந்து கிருத்தவ மத குருவான போப் பின் நல்வாழ்த்தோடு முடிபுனைந்து, ஜோசபைைேடு அரியணை ஏறினன். நெப்போலியன் பேரரசனை தும், மற்ற வல்லரசுகள் குலே நடுக்கம் கொண்டன. சிலர் அவன் நட்புறவை நாடினர். உருசிய நாட்டு மன்னன் தன் தங்கையை நெப்போலியனுக்கு மனை வியாக்க விரும்பின்ை. ஒரு வல்லரசோடு மன உறவுகொண்டால் தனக்கும் தன் நாட்டுக்கும் வலிமை ஏற்படுமென்று நெப்போலியன் கருதின்ை. தன் அண்டை நாடும், வல்லரசுமான ஆஸ்திரிய பா. 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/82&oldid=820541" இலிருந்து மீள்விக்கப்பட்டது