பக்கம்:பாரும் போரும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நாட்டு இளவரசி, அழகிலும் அறிவிலும் சிறந்தவள் என்று கேள்விப்பட்டு, அவளைத் திருமணம் செய்து கொள்ள நெப்போலியன் விரும்பின்ை. கிருத்தவ சமயக் கொள்கைப்படி ஒரு மனைவியிருக்க மற்ருெ ருத்தியை திருமணம் செய்துகொள்ள முடியாது. எனவே தன் முதல் மனைவியான ஜோசபைனுக்கு, வாழ்க்கை வசதியும், போதிய செல்வமுமளித்து விட்டு அவள் இசைவின் பேரில் மணவிலக்குப் பெற்றுக்கொண்டு, ஆஸ்திரிய அரசிளங்குமரி மேரி லூயிசாவை மறுமணம் செய்துகொண்டான். அவர் களுக்கு அடுத்த ஆண்டில் ஓர் ஆண் மகவும் பிறந்தது. - பிரான்சும் ஆஸ்திரியாவும் மண உறவால் ஒற் றுமைப் பட்டதால், தனக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நினைத்த உருசிய மன்னன் நெப்போலியனி டம் பகைமை பாராட்டினன். எனவே நெப்போலி யன் ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, உருசியாவின் மேல் போர் தொடுத்தான். உருசியப் படை பின்னடைந்தது; உருசிய நாட்டின் தலைநக ரான மாஸ்கோவை நெப்போலியன் எளிதில் கைப் பற்றிக் கொண்டான்; ஆனால், மாஸ்கோவில் மனித வாடைகூட இல்லை. மாஸ்கோவை முதலிலேயே தீயிட்டுக் கொளுத்திவிட்டு உருசியர் வேறு இடம் சென்றுவிட்டனர். நெப்போலியன் ஏமாற்றத்தோடு திரும்பினன். நெப்போலியன் படையெடுப்பால் உருசிய மக்களடைந்த கொடுந்துயர், உருசியப் பேரறிஞர் தால்ஸ்தாய் எழுதிய போரும் அமைதியும் என்ற நூலில் உருக்கமாக வருணிக்கப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/83&oldid=820542" இலிருந்து மீள்விக்கப்பட்டது