பக்கம்:பாரும் போரும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 உருசியப் படையெடுப்பிலிருந்து, நெப்போலி யனின் வீழ்ச்சி தொடங்கியது. பிரெஞ்சுப் படை திரும்பும்போது கொடிய பனிக்காலம் துவங்கியது. குளிரினுலும் பசியினுலும் பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு வீரர்கள் இறந்தனர். பனியிலும் குளிரிலும் பழக்கப்பட்ட உருசியர்கள், இச் சமயத்தை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, பிரெஞ்சுப் படைக்குப் பெரும்சேதம் விளைவித்தனர். எஞ்சிய சிறுபடையோடு நெப்போலியன் பிரெஞ்சு நாடு திரும்பினன். பிரெஞ்சுப் படை கேடுற்றதை அறிந்த மற்ற வல்லரசுகள் ஒன்று கூடி நெப்போலியன எதிர்த்தன. பெண் கொடுத்த ஆஸ்திரிய மன்ன னும் அவர்களுடன் சேர்ந்துகொண்டான். இந் நிலையில் கூட நெப்போலியன் பல இடங்களில் வெற்றி பெற்ருன். இறுதியில் தோல்வி யடைந்து, பிரான்சுக்கு இருநூறு கல் தொலைவிலுள்ள எல்பா என்னும் தீவிற்கு அனுப்பப்பட்டான். சிறிது நாட் களில் எல்பாவிலிருந்து தப்பி வந்து மறுபடியும் பிரெஞ்சு மன்னனென முடி சூட்டிக் கொண்டான். ஆங்கிலேயரும் பிரசியரும் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் படையோடு பெ ல் ஜிய நாட்டிலுள்ள வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியனே எதிர்த் தனர். அப்போரில் நெப்போலியன் தோல்வியுற்று, ஆங்கிலத் தளபதியான வெலிங்டன் பிரபுவால் சிறைப்பிடிக்கப்பட்டான். ஆங்கிலேயர்கள் ஐரோப் பாவிலிருந்து ஆருயிரத்து இருநூறு கல் தொலைவி லுள்ள செயிண்ட் ஹெலின என்ற தீவில் நெப்போலி யனைச் சிறைவைத்தனர். அவன் ஆறு ஆண்டுகள் அங்கு வாழ்ந்து தன்னுடைய ஐம்பத்து மூன்ருவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/84&oldid=820543" இலிருந்து மீள்விக்கப்பட்டது