பக்கம்:பாரும் போரும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நிறுவப்பட்டன. வாணிகம் வளர்ந்தது. நாடு செழித்தது. நெப்போலியன் ஓயாமல் படித்துக்கொண்டிருப் பான். பாசறையில் கூடப் படித்துக்கொண்டிருப் பது அவன் வழக்கம். கட்டுக் கதைகள் படிப்பது அவனுக்குப் பிடிக்காது. மத நூல்களையும் உயர்ந்த ஆராய்ச்சி நூல்களையும் இலக்கியங்களையுமே அவன் படிப்பான். பைபிள், குர்ஆன் ஆகிய இரண்டு சமய நூல்களையும் அவன் படித்துக் கிருத்தவ சமயத்திற் கும் இசுலாமிய சமயத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற் றுமைகளை ஆராய்ச்சி செய்து வந்தான். பீரங்கிக் குண்டுகள் பறந்த போர்க்களத்தில் நின்றபொழுதுகட்ட அவன் மரணத்தைப் பற்றி அஞ் சியதில்லை. இங்கு நிகழ்கின்ற போர்களில் நான் மரணத்தையே நாடி அலைகிறேன். மரணத்தைப் பற்றிய அச்சமே எள்ளவும் எனக்குக் கிடையாது. சாவே எனக்கு இன்பமூட்டவல்லது ' என்று அவன் ஒரு சமயம் கூறின்ை. நெப்போலியன் வாட்டர்லூ போரில் தோல்வி யடைந்து போர்க்களத்தில் நின்ருன். அவன் இடை யில் ஒரு கட்டாரி மட்டும் இருந்தது. அருகில் சென்று அவனைக் கைது செய்ய யாருக்கும் நெஞ்சு உறுதியில்லை. பிறகு நெப்போலியன் தானே கட்டா. ரியைத் தொலைவில் வீசியெறிந்தான். அதன் பிறகே அவனைக் கைது செய்தனர். நெப்போலியன் தன்னுடைய அறிவிலுைம், ஆற்றலினுலும், தளராத ஊக்கத்தாலும் தனி அரசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/87&oldid=820546" இலிருந்து மீள்விக்கப்பட்டது