பக்கம்:பாரும் போரும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 நிலைநாட்டிப் புகழ்பெற்ருன் ; முதன் முதலாக ஐரோப்பாவிற்குப் போர் முறையின் துணுக்கங்களை எடுத்துக் காட்டின்ை; சிறிய படையைக் கொண்டு பெரிய படையைத் தகர்த்து வெற்றிபெறும் வழியைக் கண்டு பிடித்தான் ; அஞ்சா நெஞ்சத்துடன் தனி மனிதனுக நின்று ஐரோப்பாவைக் கலங்கச் செய் தான் ; நெப்போலியனே இன்றும் பிரெஞ்சு மக்கள் கடவுள்போல் போற்றி வருகின்றனர். போர்க்களத்தில் நுழைந்தால் நெப்போலியன் காலன்போல் விளங்குவான். ஆனல் தனி வாழ்வில் அவனைப்போன்ற உயர் மனிதனேக் காணமுடியாது. நெப்போலியன் பேராட்சி வெறி கொண்டவன் தான் ; ஆல்ை இறுதிக் காலத்தில் அதற்காக வருந் தின்ை ; தான் இறக்கும்போது, தன் மகன் நடந்து கொள்ளவேண்டிய முறைகளைப் பற்றிப் பின்வரு மாறு குறிப்பிடுகிருன் : r ‘ என் மகன் என் வாழ்க்கையைப் பின்பற்றி நடக்கவேண்டும். உண்மையான பிரெஞ்சுக் காரணுக எல்லா வகையிலும் விளங்கவேண்டும். விளையாட்டுக்காகப் போர் தொடங்கக் கூடாது. மிகவும் தவிர்க்க முடியாத நிலையில், போரில் இறங்க வேண்டும். பிரெஞ்சு நாட்டின் புகழை உயர்த்த வேண்டும். நாட்டின் அமைதிக்காகப் பாடுபட வேண்டும். அயல் நாட்டினரின் துணையால் பட்டத்துக்கு வர முயற்சிக்கக் கூடாது. அப்படி அரசாள்வதைவிடச் சும்மா இருக்கலாம்' என்று எழுதிவைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/88&oldid=820547" இலிருந்து மீள்விக்கப்பட்டது