பக்கம்:பாரும் போரும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

யோ, உலகியலின் அடிப்படைக் கருத்தைத் தன்ன கத்தில் கொண்டு மிளிர்கிறது.

போராட்டமே உலகியல் :

ஒன்றை ஒன்று அழித்து முன்னேறுவதுதான் உலகியல். படைப்புக் காலந்தொட்டு இன்றுவரை உயிர்களின் வளர்ச்சி இத்தகையதே. சார்லஸ் Lirirsálsir (Charles Darwin) GT6örp Guggől 55Tirsb ஆய்ந்து வெளியிடப்பட்ட பரிணுமக்கொள்கையை எல்லாரும் அறிவர். “உயிரினங்களின் போராட் டமே உலக வாழ்க்கை; ஒன்றன் அழிவிலேதான் மற்ருென்று கருக்கொள்கிறது ' என்று அவ்வறிஞர் வகுத்துப் போந்தார்.

சிறுமீனைப் பெருமீன் உண்டு வளர்கிறது. வலி வற்ற மனித இனத்தை அழித்து, வலிவுள்ள மக்கள் இனம் ஓங்குகிறது. இம்மாநிலத்தில் தோன்றிய மக் களினம் பல. அவை உலக அரங்கில் தோன்றின; சிறிது காலம் நடித்தன; பின் அழிந்தன; அழிக்கப் பட்டன. திராவிடர், ஆரியர், மங்கோலியர், காக்கே சியர், கெல்ட்டுகள், ஹ9ணர்கள் என எத்தனையோ கூட்டத்தார் தோன்றினர் ; வாழ்ந்தனர் : தங்களுக் குரித்தான சில குறியீடுகளே உலகிற்கு வழங்கிவிட்டு அழிந்தனர் ; வலி குன்றியிருந்தபொழுது வலிமிக்க பிறரால் அழிக்கப்பட்டனர்.

மொகஞ்சதாரோ, ஆரப்பா என்ற இடங்களில் செழித்து வாழ்ந்த திராவிடரின் சிந்துவெளி நாகரி கம் மண்ணில் மாண்டது. யூபிரிடிஸ், டைக்ரிஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/9&oldid=595517" இலிருந்து மீள்விக்கப்பட்டது