பக்கம்:பாரும் போரும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 உயர்வுக்குப் பெரிதும் பாடுபட்டார். விஞ்ஞானத்தி லும் பொருளாதாரத்திலும் ஜெர்மனி வெகுவாக முன்னேறியது; தொழிற்றுறையில் வியக்கத்தக்க முன்னேற்றம் காட்டியது; பொருள்களை மலிவாக உற்பத்தி செய்து, மற்ற வல்லரசுகளோடு வாணிகத் தில் போட்டியிட்டது; சிறந்த கப்பற் படையையும், பெரிய நிலப் படையையும், வலிய விமானப் படை யையும் நிறுவியது. ஜெர்மனியின் முன்னேற்றத் தைக் கண்டு, மற்ற வல்லரசுகள் பொருமையும் அச்சமும் கொண்டன. குறிப்பாக ஜெர்மனியின் வலிய கப்பற்படையைக் கண்டு, கடலரசியான இங்கிலாந்து கொண்ட அழுக்காற்றுக்கு அள வில்லை. " ஜெர்மனிதான் உலகத்திற்குத் தலைமை வகிக்கப் போகிறது. அது தனக்குரிய இடத்தைப் பெற விரும்புகிறது. ஜெர்மனியின் வருங்காலம், அதன் கடலாதிக்கத்தைப் பொறுத்திருக்கிறது. உலகெங்கும் தன்னுடைய பண்பாட்டைப் பரப்ப வேண்டியது அதன் கடமையாகும்,' என்று ஜெர்மானியப் பேரரசர் கெய்சர் பெருமுழக்கம் செய்தார். - பிரான்சும் ஜெர்மனியும் பரம்பரைப் பகைவர் கள். ஜெர்மனியிடம் முதலில் அடைந்த தோல் விக்குப் பழி வாங்க, தக்க வாய்ப்பைப் பிரான்சு எதிர்நோக்கியிருந்தது. துருக்கியின் நட்பைப் பெற்று, வாணிக வளர்ச்சிக்காகப் பாக்தாத் வரையில் இருப்புப்பாதை அமைக்க எடுத்துக்கொண்ட ஜெர் மனியின் முயற்சி, மற்ற வல்லரசுகளின் பொருமைத் தீயை மேலும் கிண்டிவிட்டது. ஜெர்மனி, ஆஸ்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/90&oldid=820549" இலிருந்து மீள்விக்கப்பட்டது