பக்கம்:பாரும் போரும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 உலகப் போர் : இச்சமயத்தில்தான் முதல் உலகப் போர் துவங் கியது. ஆஸ்திரிய நாட்டு இளவரசரும் அவர் மனே வியும், தங்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாஸ்னியா நாட்டின் தலைநகரான சிராஜிவோவுக்குச் சென்ற னர். இளவரசர் பெர்டிஞண்டும் அவர் மனைவியும் திறந்த கோச்சு வண்டியில் ஊர்வலம் வந்தபொழுது, யாரோ அவ்விருவரையும் சுட்டுக் கொன்று விட்ட னர். ஆஸ்திரியப் பேரரசு, பாஸ்னியாவின் அண்டை நாடான செர்பியாவை இச்சதிக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டியது. செர்பியா குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது: ஆனல் ஆஸ்திரியா மன்னிக்க மறுத்துச் செர்பியா வின் மீது போர் தொடுத்தது. இச்சிறு பொறியே உலகப் போர் என்னும் காட்டுத் தீயாக மாறியது. போர் விருப்புக் கொண்டு எல்லா வல்லரசுக ளும் இருந்தாலும், சில சூழ்நிலைகளின் காரணமாக முதலில் போரில் இறங்கத் தயங்கின. அறிவற்ற அமைச்சர்களின் துரண்டுதலால், உருசிய மன்னன் ஜார் பெரும்படை திரட்டிப் போருக்குத் தயாரானன். உருசியாவின் போர்க்கோலத்தைக்கண்ட ஜெர்மனி, உருசியா படை திரட்டுவதை நிறுத்த வேண்டு மென்று கூறியது. ஆல்ை, ஜார் அதற்குச் செவி சாய்க்கவில்லை. உடனே ஜெர்மனி பிரான்ஸ் மீதும், உருசியா மீதும்போர் அறிவிப்புச் செய்தது. பெல்ஜிய நாட்டின் நடுநிலைமையை மீறி, அதன் வழியாக ஜெர் மனி தன் படையைப் பிரான்சு நோக்கிச் செலுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/92&oldid=820551" இலிருந்து மீள்விக்கப்பட்டது