பக்கம்:பாரும் போரும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அல்லவா? எம்டன் என்பது ஒரு ஜெர்மானியப். போர்க் கப்பல். அது நேசநாட்டுக் கப்பல்களைக் கதி கலங்க வைத்தது. அதல்ை மூழ்கடிக்கப்பட்ட நேச நாட்டுக் கப்பல்கள் கணக்கிலடங்கா. சென்னையைக் கூட அக்கப்பல் தாக்கியது. ஜெர்மனியானது தன் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு, நேசப் படை யினரின் கப்பல்களைக் கடலின் அடிவயிற்றுக்குள் அனுப்பிக் கொண்டே இருந்தது. இந்நீர்மூழ்கிக் கப்பற் போரில் ஜெர்மனி நல்ல வெற்றியடைந்த தென்றே சொல்லவேண்டும். மேலும் ஜெர்மானி யரின் ஜெப்பலின் விமானங்கள், நிலாக்கால இரவு களில் பறந்துவந்து இலண்டன் நகர்மீதும், படைக் கலத் தொழிற்சாலைகள் மீதும் குண்டுகளை வீசிப் பேரழிவு செய்தன. நச்சுப்புகையையும் ஜெர்மன் கையாண்டது. - டாங்கி என்பது, முதல் உலகப் போரில் பயன் படுத்தப்பட்ட ஆங்கிலேயரின் புதுப் படைப்பு; மேடு பள்ளம் எல்லா இடங்களிலும் கம்பளிப்பூச்சி போல் ஊர்ந்து செல்லக்கூடிய அரக்கப் பொறி. இதன் தாக்குதலால் நூருயிரக் கணக்கான வீரர்கள் கொல் லப்பட்டனர். ஜெர்மானியத் தலைவர்கள் தங்கள் நீர்மூழ்கித் தாக்குதலை இன்னும் கடுமையாக்கி, இங்கிலாந்தைப் பட்டினி போட்டுப் பணிய வைப்ப தென்று முடிவு செய்தனர். இங்கிலாந்திற்கு உணவு ஏற்றிச் செல்லும் நொதுமல் கப்பல்களையும் மூழ்கடிப் போம் என்று அறிவித்தனர். அதைக் கேட்டு அமெரிக்கா கடுங்கோபங் கொண்டது. லூசிடானியா என்ற ஆங்கிலக் கப்பல் ஜெர்மானிய நீர்மூழ்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/95&oldid=820554" இலிருந்து மீள்விக்கப்பட்டது