பக்கம்:பாரும் போரும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 முதல் உலகப் போரின் விளைவுகள் : முதல் உலகப் போரால் விளைந்த கேட்டை, வரையறுத்துக் கூற முடியாது. போரில் பங்கு கொண்ட நாடுகளில் பட்டினியும் கொள்ளை நோயும் தலைவிரித்தாடின. கடன் தொல்லையும், பொரு ளாதார நெருக்கடியும் குரல் வளையை நெறித்தன. அரசியல் வாதிகள், தொழில் முதலாளிகள் ஆகி யோரின் போர் வெறியாலும் பேராசையாலும் போர் ஏற்பட்டது. ஆல்ை அதன் விளைவால் அவதியுற்ற வர் ஏழைகளும் நடுத்தர மக்களுமே. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குற்றமு மறியாத இலட்சக்கணக் கான இளங் குருத்துகள் போர் என்னும் பலி பீடத் திலே சாய்க்கப்பட்ட்ன. போரின் கொடுமையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. அப்போரில் ஏற்பட்ட அழிவுகளைக் கணக்கிட்டு வெளியிடப் பட்டுள்ள பட்டியலைப் பார்த்தாலேபோதும். மனிதன் எந்த அளவு விலங்கு நிலைக்குத் தாழ்ந்திருக்கிருன் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும். அப்பட்டியல் பின்வருமாறு :- - போர் வீரர்களில் மாண்டவர்கள் என்று நிச்சய மாகத் தெரிந்தவர்கள் : ஒரு கோடி முப்பது லட்சம் பேர். மாண்டதாகக் கருதப்படுபவர்கள் : - முப்பது லட்சம் பேர். மக்களில் (Civilians) மாண்டவர்கள் : ஒரு கோடி முப்பது லட்சம் பேர். காயம்பட்டவர்கள் : இரண்டு கோடிப் பேர். சிறைப்பட்டவர்கள் : முப்பது லட்சம் பேர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/97&oldid=820556" இலிருந்து மீள்விக்கப்பட்டது