பக்கம்:பாரும் போரும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 போரில் அநாதையாக்கப்பட்ட குழந்தைகள் : தொண்ணுாறு லட்சம் பேர். போரால் கணவனே இழந்த கைம்பெண்கள் : - ஒரு கோடிப் பேர். நேசக் கட்சியினரின் போர்ச் செலவு: சுமார் நாலாயிரத்து நூறு கோடி பவுன். ஜெர்மன் கட்சியின் போர்ச் செலவு : - சுமார் ஆயிரத்து ஐந்நூறு கோடிப் பவுனுக்குமேல். இரண்டாம் உலகப்போர்: முதல் உலகப்போரில் பங்கு கொண்ட நாடுகள் அடைந்த இன்னலுக்கு அளவில்லை. ஆனல் போர் முடிவுற்றதும் ஒவ்வொரு நாடும் பழிவாங்கும் எண்ண. மும் பகை உணர்ச்சியும் கொண்டு விளங்கினவே யன்றி அமைதி கொள்ள விரும்பவில்லை. அமெரிக்க மக்கட் தலைவரான உட்ரோ வில்சன் உலக அமைதி Görfi 2–608, Em(\sir späth (League of Nations) எ ன் ற ஓர் அமைப்பை நிறுவினர். ஆணுல், அமெரிக்க நாடே அதில் பங்குகொள்ளாமலிருந் தது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இறுதியில் அக் கழகம் ஒரு பொம்மலாட்டமாகவே முடிந்தது. அதனுல் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடிய வில்லை. அதன் சட்டதிட்டங்கட்கு அடங்காமல், ஜப்பான் சீன நாட்டின்மேல் படையெடுத்தது. இதாலியானது அபிசீனியா, ஆல்பேனியா முதலிய சிறு நாடுகளின்மேல் படையெடுத்து வென்று, தன் பேரரசோடு சேர்த்துக்கொண்டது. ஜெர் மானிய மக்கள், மக்களாட்சியைவிடச் சர்வாதிகார பா. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/98&oldid=820557" இலிருந்து மீள்விக்கப்பட்டது