பக்கம்:பாற்கடல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

95


வக்கும் இருந்தது. ‘மூடி வைத்துக் கல்யாணம் பண்ணி விட்டார்கள். பேசு மொழிக்குப் பெண்டிர் சொல். கவனி - ஆரம்ப எழுத்தாளர்களுக்கு என் சூத்திரம் அதில் சிந்தும் கனம், கேலி, செறிவு ஆண்களுக்கு சாத்தியமில்லை)

எள்ளும் பச்சரிசியும் கலந்தாற் போன்ற ஜோடிப் பொருத்தம். அழகு பார்த்தா அந்த நாள் திருமணங்கள்! புகுந்த வீட்டில் பெண் வயிறு பசியாமல் சாப்பிடுவாளா? அதைவிட முக்கியம், ஊர் வாயில் புகுந்து புறப்படு முன் வீட்டை விட்டுப் பெண்ணை எப்படி யேனும் கழற்றிவிடு.

நடராஜ ஐயருக்குக் காலில் சக்கரம். வீட்டைவிட்டு அப்பப்போ காணாமல் போய்விடுவார். பல மாதங்கள் கழித்துத் திரும்பி வருவார். மறுபடியும் 'அம்பேல். போகும்போது பண்டங்களைக் கழற்றிப் போனார். அல்ல, எடுத்துக்கொண்டு போனார். ஏன் போனார்? நான் உங்களைக் கேட்கிறேன். சில வீடுகளில் இதுபோல், செல்லாக்காசு ஒன்று இருக்கும். மளிகைக் கடைக்காரனிடம் கொடுத்து மாற்றிவிட்டதாகச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்போம். காய்கறிக் கடைக்காரனிடமிருந்து அதே காசு திரும்பி வந்துவிடும். வீட்டுக்கு வந்து சில்லரையை எண்ணிப் பார்க்கும் போதுதான் தெரியும். அதிர்ஷ்டக் காசு என்று தேற்றிக் கொள்வதா? ஐயோ. ஸ்ரீமதியின் அதிர்ஷ்டமே!

இதுதான் ‘ஸஸ்பென்ஸ். நடராஜ ஐயர் கஞ்சா அடிப்பார். இடது உள்ளங்கையில் இலைச்சூர்ணத்தை வைத்து வலது கட்டைவிரலால் தேய், தேய். நிமண்டு, மறுபடியும் தேய். பதம் காணும்வரை இப்படியே செய்து கொண்டிரு. அனுபவிக்கப்போகும் 'பங்'கின் எதிர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/101&oldid=1533378" இலிருந்து மீள்விக்கப்பட்டது