பக்கம்:பாற்கடல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

லா. ச. ராமாமிருதம்


பார்ப்பில் இப்பவே கண்ணில் ஒரு செருகல். புகைத்துப் புகைத்துப் பொலிவிழந்து போன முகத்தில் நாளடைவில் வெந்நீர் அண்டாக் கரிபோல் கன்னங்களில் சேர்ந்துவிட்ட ஓர் அசடு. கூடவே, மாட்டிக் கொண்டோம், கழற்றிக்கொள்ள முடியவில்லை, பார்த்தையா எனும் உண்மையான சோகம்….

ஆச்சு ஆச்சு. இனிப் பொறுக்காது. எடு குழாயை, அத்தோடு ஒட்டிய துணியுடன் பற்றவை பற்றவை. வத்திப்பெட்டி இந்தச் சமயத்துக்கு மறந்துபோனால், அல்லது அதன் கடைசிக் குச்சியில் இருந்தால், அதுவும் கிழித்த சுருக்கில் 'சுர்ர்ரோடு - புஸ்க்" ஆனால் - இந்தச் சமயத்துக்கு நரகம் இதைவிட இல்லை.

புக் புக், புகு புகு, புக்டக். அப்பாடி, அம்மாடி! என்ன சுகம்! என்ன சுகம், பெகு ஸுக், பெகு ஸுக், மஞ்சி ஸுகம் மஞ்சி ஸுகம். உலகத்தின் அத்தனை பாஷைகளிலும் அந்த சுகம். அதையும் தாண்டி ஆனந்தம். சொர்க்கம்? யாருக்கு வேணும்? பின் வேறு எங்கு இருக்கிறேன்?

இதெல்லாம் அப்பா - அண்ணா சொன்னது. லாசராவுக்குத் தானாகவே இந்த "கெத்து வந்துவிடுமா? அண்ணா, பார்ப்பதற்கு - ஏன், சுபாவத்திலேயும் சாதுதான். ஆனால் அவரிடம் ஒரு 'வெள்ளை’க் கபடு உண்டு. தான் சிக்கமாட்டார். ஆனால் ? எதிராளிக்கு விலா தைக்கும்படி ஆகிவிடும்.

மேற்கூறிய சடங்கை, படிப்படியாக அதன் கடைசி சித்திவரை வீட்டுள் பண்ண முடியாது. வாய்க்கால் கரையோரம், துவைக்கும் கல், பாழ்மண்டபம், சில இடங்களில் தென்னங்கொல்லையிலோ, சப்பாத்திப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/102&oldid=1533379" இலிருந்து மீள்விக்கப்பட்டது