பக்கம்:பாற்கடல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

99


என் தகப்பனாருக்கு அத்தையைக் கண்டால் பயம். ஒருசமயம் கடையில் உப்பு வாங்கிவரச் சொன்னாளாம். இவர் ஏனம் கொண்டுபோகாமல், கடைக்காரனிடம் காகிதம் இல்லாமலோ இஷ்டமில்லாமலோ, எரிச்சலோடு மடியில் ஏந்தப் பண்ணிவிட்டான். அண்ணா அப்போ என்ன, சின்னப்பையன் - இடுப்பு முண்டுத் தலைப்பை அப்படியே பிடித்துக்கொண்டே கவனத்தைச் சொந்த ஆகாயத்தில் பறக்க விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து மடியை உதறியதும் எண்ணி எட்டு உப்புக்கற்கள் உதிர்ந்தனவாம். அத்தை அன்று கொடுத்த விளாசலில் - அடேயப்பா? அத்தை பொல்லாதவள்.

என் அம்மாவும் தன் அம்மாவைப் பற்றி ஒரு கதை வழங்கியிருக்கிறாள்.

ஒரு நாளிரவு, வாசல் திண்ணையில் அவள் அம்மாவும் எதிர் வீட்டுப் பாட்டியும் பேசிக்கொண்டிருந்தாளாம். பக்கத்தில் ஒரு பிள்ளை குப்புறப் படுத்துக் கொண்டிருக்கிறான். மடியில் மறு பையனை உறங்கப் பண்ணிக்கொண்டிருக்கிறாள். அம்மா திண்ணைத் தூணைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாளரம்.

"இன்னிக்கு அடைக்கு அரைச்சேன். நாட்டுப்பெண் தட்டினாள். இரண்டு விண்டு வாயில் போட்டுண்டேன். ராமா, கிருஷ்ணா, இன்னிப்பொழுது கழிஞ்சது. விடிஞ்சால் நாளைக்கு வேறே பொழுது. வேறே படியளப்பு!”

இரண்டு என்றால் நாலு என்று கொள்ள வேண்டும். இது பாஷையில் திரிசமம்.

"ஸ்ரீமதி ! உனக்கு இன்னிக்கு என்ன பலகாரம்?"

"தோசை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/105&oldid=1533451" இலிருந்து மீள்விக்கப்பட்டது