பக்கம்:பாற்கடல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

லா. ச. ராமாமிருதம்


"தோசையா?" - என் அம்மா ஆச்சரியமுற்றாள். அவளுக்கு வயது அப்போது ஐந்தோ, ஆறோ.

"சாதமே இல்லை, தோசையாம்!”

அன்று அரிசிக்காரி யோகாம்பாள் வரவில்லை. அவள் வரவில்லையானால் அன்றைய பாடு அவ்வளவு தான். ஏதோ பிராமணக் குடும்பம் என்று ஈவு இரக்கம் பார்ப்பாள். பணம் சற்று முன்னே பின்னே வாங்கிக் கொள்வாள். அந்த அன்னபூரணித் தாயும் வராவிடின் அன்றைய படியளப்பு ஆகாசம்தான்.

"திண்ணை இருட்டில் என் அடித்தொடையில் அம்மா ஒரு திருகு திருகியிருக்காள் பாரு. இப்போ நினைச்சாக்கூட அழுகை வரது."

ஸ்ரீமதியின் விஸ்வரூபம் அம்முவாத்து முழு முத்திரையுடன் அவள் மரணத் தறுவாயில்தான் வெளிப் படுகிறது.

என் தாய்க்கு அப்போது வயது பதின்மூன்று/ பதினாலு வயதுகளை உத்தேசக் கணக்கிலே ஒப்பிட்டுப் பார்க்கையில் ஸ்ரீமதிப் பாட்டி நாற்பது தாண்டினாளோ, சந்தேகம். ஒன்றிரண்டு கூடக் குறைய இருக்கலாமோ என்னவோ?

வீட்டில் யாருக்கோ திவசம். அதுசமயம் வழக்கப்படி குழுமும் அம்முவாத்துக் கூட்டம் இன்னும் பூராகக் கலையவில்லை.

திவசம் கழிந்த மூணு நாட்களுக்கு வீட்டில் பட்டினி தெரியாது. மூலைப் பழையதிலும், சுண்டான் குழம் பிலும் இரண்டு மூன்று நாட்கள் வண்டி தூம்தடாகா' வில் ஓடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/106&oldid=1533900" இலிருந்து மீள்விக்கப்பட்டது