பக்கம்:பாற்கடல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

101


சுண்டக் குழம்பு ஆரம்பத்தில் நன்றாய்த்தானிருக்கும். நானும் சாப்பிட்டிருக்கிறேன்.

பெரிய கற்சட்டி, அம்முவாத்து மியூஸியம் பீஸ் நானும் பார்த்திருக்கிறேன். அது உடைந்தபோது மன்னிப் பாட்டி அழுதாள்.

திவசத்தின் மிச்சம் மீதிக் குழம்பு, ரஸம், கூட்டு, பதார்த்த வகைகளுடன் இன்றியமையாத கீரையையும் புழக்கடையிலிருந்து பிடுங்கிச் சேர்த்து, இன்னும் கொஞ்சம் எண்ணெயையும் கூட்டிக் காய்ச்சி, சுண்டக் காய்ச்சி அன்றன்று குறையக் குறைய மீதியை இன்னும் காய்ச்சிக் காய்ச்சி மீண்டும் carry over ஐக் காய்ச்சி சுண்டச் சுண்ட அதற்கு ஒரு கறுப்பு கண்டு, ஆறின நிலையில் ஏடு புடைத்துக்கொண்டு, அப்புறம் ஒரு பழம் வாடை வீச ஆரம்பித்ததும், ஜாடை தெரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்துகொள்ள மறுத்து - எல்லாம் இல்லாக் குறைதான் - உனக்காச்சு எனக் காச்சு என்று வகை பார்த்தால், அந்தக் கறுப்பு, அன்று பாற்கடலைக் கடைந்ததும் படர்ந்த நீலத்தை விழுங்கிய காலகண்டனையும் கவிழ்க்கவல்ல கரி என வேளை தவறி அடையாளம் கண்டுகொண்டு என்ன பயன்?

மூன்று நாட்கள் வயிற்றுப்போக்கில், குடல் சதையையே பிய்த்துக்கொண்டு வருவதுபோல் (நடந்ததும் அதுதானோ என்னவோ?) திருகித் திருகி அப்படி ஒரு வலி, அதிஸாரம் என்று அதன் பெயராம்.

ஆஸ்பத்திரியென்றால் அக்கரைச் சீமையென்று பயப்படும் நாட்கள். அங்கு நம் வருகைக்காகக் காத்திருக்கும் யமனுக்குத் தெரிந்த பாடாக, வீடு தேடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/107&oldid=1533901" இலிருந்து மீள்விக்கப்பட்டது