பக்கம்:பாற்கடல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

லா. ச. ராமாமிருதம்


வரும் யமனே மேல். வேளை வந்துவிட்டது வந்து விட்டான். நல்ல யமன் ஊசிக்காதில் நுழையுமளவுக்கு உயிரோட்டம் குறுகிவிட்டது ஸ்ரீமதிக்குத் தெரிந்து விட்டது.

பணக்காரன் சுவர்க்கத்துள் நுழைவது ஊசிக்காதில் ஒட்டகம் நுழைவதைக் காட்டிலும் கடினம். அம்மு அகத்தில் அதுபோன்ற பணக்காரப் பிரச்சினைக்கு வழி கிடையாது.

ஆனால், இந்த ஊசிக் காதுதான் உயிர் இரண்டறக் கலக்கும் அகண்ட ஏரியின் முகத்துவாரம். அங்குதான் காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே. திருவெண்காடர் சொல்லித்தான் ஸ்ரீமதிக்குத் தெரிந்து ஆக வேண்டியதில்லை.

"அண்ணா ராமண்ணா" குரலில் தனி கணீர். கண்ணாடி உடையப்போவது போல், பயம்? பயம் தந்த தைரியம்? இந்த நாள் பாஷையில் ஹிஸ்டீரியா?

"இங்கேதான் இருக்கேன், ஸ்ரீமதி" தாத்தாவுக்கு இந்தத் தங்கைமேல் எப்படியும் தனி உசிர்,

"அண்ணா! நான் நாளைக்காலை தாண்ட மாட்டேன்! அம்மாப்பெண் எங்கே? அம்மாப் பெண்ணே!” அம்மாப் பெண் கையைப் பிடித்து, அண்ணன் கையில் கொடுத்து, "என் பெண்ணை சப்த ரிஷிக்குத்தான் நீ பண்ணிக்கணும்!”

"இப்போ என்ன அதைப்பத்தி? நாளைக்கு நடக்கப் போறதை யார் கண்டது?” மன்னி நீட்டி முனகினாள். அவளுக்குத் தன் பிள்ளைக்குப் பரிசப் பணம் வாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/108&oldid=1533902" இலிருந்து மீள்விக்கப்பட்டது