பக்கம்:பாற்கடல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

103


வேண்டும் என்று ஆசை இருக்காதா? மூத்த பிள்ளை. எப்.ஏ.க்குப் படித்துக்கொண்டிருக்கிறான்.[1]

ஸ்ரீமதி காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. “நாலுபேர் நாலு சொல்வா. நீ கேட்கப்படாது. ஏற்கெனவே தகப்பனில்லாத குழந்தைகள். இதோ நானும் விட்டுட்டுப் போயிடப் போறேன். என் பெண் தெரியாத இடத்தில் புகுந்து கண் கலங்கினாள் என்று இருக்கக்கூடாது. நல்லதோ பொல்லாதோ அவள் இந்த விட்டுக்கே வாழ்க்கைப்படட்டும். நான் இப்போ உன்னைக் கேட்கிறபடி நீ நடப்பதை நான் தெய்வமாக இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துண்டு இருப்பேன். என்ன சொல்றே ?”

"அப்படியே பண்ணிக்கிறேன் ஸ்ரீமதி!”

“என் மற்றக் குழந்தைகள் எங்கே?"

சுப்ரமணியம், சுந்தரத்தை ஒருமுறை அணைத்துக் கொண்டு, முத்தமிட்டு, தன்னிடமிருந்து மெதுவாகத் தள்ளினாள். "இனிமேல் என்னிடம் வராதேயுங்கள். என்னைப் படைச்சவனைச் சந்திக்க நான் தயாராகணும்!” அவ்வளவுதான். சுந்தரகாண்டத்தை எடுத்து வைத்துக்கொண்டு இரவின் மிச்சப் போதுக்கு வியாக்யானம், வின்யாசம், கவிநயம், பொருள்நயம், சொல்நயம், மனோதத்துவ ஆராய்ச்சி.

"ஏன் அண்ணா, இந்த அனுமனைப்போல் தன்னடக்கம் உண்டா, இதை நம்பும்படியாக இருக்கா?


  1. அப்போதையக் காலம் மெட்ரிகுலேஷனுக்கு அடுத்து FA இரண்டு வருடக் கல்லூரிப் படிப்பு. PUCக்கு ஈடாக இருக்கலாம். அதுவும் 10+2வாக மாறிவிட்டது. ஆனால் அந்த FAக்கு இந்த 10+2 என்ன, இன்றைய BA. உறை போடக் காணுமா? அதன், அஸ்திவாரமே வேறு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/109&oldid=1533903" இலிருந்து மீள்விக்கப்பட்டது