பக்கம்:பாற்கடல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

லா. ச. ராமாமிருதம்


நரம்பு அறுந்திருந்தது. தாம்புக்கயிறு திரி பிரிந்தாற்போல் எந்த நிமிடமேனும் கயிறு அறுந்து வாளி மூழ்கிவிடக் கூடும்.

வாழும் வாழ்க்கையையே நடைமுறையில் இலக்கியமாக மாற்ற முயன்றார்களோ?

இவர்களிடம் ஒரு தன்னழிப்புணர்வு மறைந்து கிடந்ததோ ? உலகில் சாவின் விளைவுக்கே காரணம் death-wish என்று ஒரு வாதம் ஏற்கெனவே வழக்கில் இருந்து வருகிறது. அது இவர்களிடம் அழுத்தமான விளம்பல் கண்டிருந்ததோ ?

தன்னழிவு மூலம் அமரத்வம், மரணம்-? பூ!

பெருந்திரு, குலதெய்வம் - இன்னொரு பூ! நம்மையே அவளிடம் ஒப்படைத்தாகி விட்டது. நம் நிலைமை அவளுக்குத் தெரியாதா? அவளை நாம் என்ன வரம் கேட்பது? அப்புறம் குலதெய்வம் என்கிற பட்டம் என்ன வேண்டிக்கிடக்கு? அதைவிட அரிசிக் காரி யோகாம்பாளுக்கு தூபம் போட்டால் கைமேல் பலன் உண்டு.

”நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.”

விரோதம், குரோதம் பாராட்டினாலும், கடைசி வரை அதுவேதான். அப்படித்தான். வளைந்தே கொடுக்கமாட்டோம். ஆனால் இத்தனைத் தர்க்கம் குதர்க்கம் என் அறிவின் - அல்ல - அறிவு என்று நினைத்துக்கொண்டிருக்கும் அசடின் அதிகப்பிரசங்கமாக இருக்கலாம்.

'பிழைக்கத் தெரியாத கூட்டம்!' அண்ணா புழுங்குவார். அப்பாவின் தகுதிக்கு அவர் காலத்துப் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/112&oldid=1533964" இலிருந்து மீள்விக்கப்பட்டது