பக்கம்:பாற்கடல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

லா. ச. ராமாமிருதம்

"குழந்தைகள் சோற்றுக்கு ஆலாப் பறக்கிறதுகள். இதில் இது ஒண்ணுதான் குறைச்சல். குடிக்கிறதுக்குக் கூழ் கூட இல்லை. ஆனால் கொப்பளிக்கிறது 'பன்னீர்’.

அண்ணாவுக்கு மிக மிக வெறுப்பு.

கொடிது கொடிது வறுமை கொடிது.

அதனினும் கொடிது இளமையில் வறுமை.

வறுமையால் வீட்டுச் சூழ்நிலை, பட்டினிகள், பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்காமலே, சொல்லிக் கொடுக்கத் தெரியாமலே, உபாத்தியாயர்களின் கொடுமை, பின் வந்தவர்களைக் காட்டிலும் அவரை அதிகம் பாதித்துவிட்டன என்று சொல்ல வேணும். ரோசம், நுட்பமான மனம் உடையவர்கள் பாடு என்றுமே கஷ்டம்தான்.

இளம் வயதில் அவருக்கும் பாட்டிக்கும் இடையே ஒரு வாக்குவாதத்தை அடிக்கடி சொல்வார்.

“மன்னி, பண்டாரி மாமி முறுக்கு சுத்தறாளே, வாசனை மூக்கைத் துளைக்கிறதே. நம்மாத்தில் ஏன் சுத்தக்கூடாது? நீ எப்போ சுத்தப்போறே ?”

"நீ பெரியவனாகி, உத்தியோகம் பண்ணி, சம்பாதிச்சுக் கொண்டுவந்து என்னிடம் கொடு. பண்டாரி மாமியைவிட பேஷா பண்ணறேன்!"

"நான் சம்பாதித்தபின் இவளிடம் வந்து கொடுத்து இவள் முறுக்கு பண்ணறவரை காத்திருக்கணுமா? நேரே ஹோட்டலுக்குப் போறேன்!”

அண்ணா பேச்சு சில சமயங்களில் சாப்ளின் தமாஷ் போல் இருக்கும். கேட்டவருக்கு உதட்டில் சிரிப்பு வெடிக்கையிலேயே, நெஞ்சில் பக்கென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/114&oldid=1533966" இலிருந்து மீள்விக்கப்பட்டது