பக்கம்:பாற்கடல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

லா. ச. ராமாமிருதம்


புருஷன், மனைவி; பெரிய குடும்பம். கணவன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். பல வருஷங்கள் கழித்துத்தான் திரும்பி வந்தான். குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்துவிட்டார்கள்.

"இதுகளை நானும் இல்லாமல் எப்படி வளர்த்தாய்?" என்று வியப்புடன் கேட்டானாம்.

"நீங்களும் இல்லை. என்னவோ புல்லையும், மண்ணையும் போட்டு வளர்த்தேன்!” என்றாளாம்.

”புல்லைக் கொடுத்து வளர்த்தாயா ? என்ன அக்கிரமம்? இதுகளுக்கு இப்படி நாக்கை வளர்க்கணுமா? அதுவும் நான் இல்லாத சமயத்தில்! இது கட்டுப்படியாகுமா?” என்று கணவன் கோபம் பொங்கி வழிந்தானாம்.

என் தந்தையின் கதைகளே கொஞ்சம் 'அலர்ஜி' தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/116&oldid=1533968" இலிருந்து மீள்விக்கப்பட்டது