பக்கம்:பாற்கடல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

119


திரும்ப எண்ணினதையே விதம்விதமாக எண்ணி, சொன்னதையே விதம்விதமாகச் சொல்லி, செய்ததையே விதம்விதமாகச் செய்து, மூன்றிலும் விதம் விதமாகக் கூட்டிக் கடைந்து - "அம்மா, என்னடி பண்ணறாள்? மணம் கூடத்தைத் தூக்கறதே!”

”கூடமா ? எனக்குத் தெருத்திருப்பத்திலேயே வந்தாச்சு. அதான் ஓடிவருகிறேன்! என்னடி செய்யறா?”

கவிதாதேவி அவளுடைய மர்மப்புன்னகை புரிகின்றாள். அந்த மணம்தான் பண்பு. அதன் அடிப்படை உச்சரணை திரும்பத் திரும்ப.

இந்தச் சமயத்தில் ஒன்றைத் தெளிவாக்க விரும்புகிறேன். எதுவும் புதிதாக நாமும் சிருஷ்டித்துவிடவில்லை. எல்லாம் ஏற்கெனவே இருந்ததுதான்.

Let there be light; and there was light.

இருளின் கர்ப்பத்திலிருந்து புறப்பட்டதுதான் ஒளி. ஏற்கெனவே இருந்ததுதான். வேளையின் ரஸாயனத்தில் நம் உள்ளொளி, தன்னை வெளிப்படுத்திக் கொள்கையில் அதையேதான் தரிசனம் என்கிறோம்.

நினைவின் மறுகூட்டலில்தான் நெஞ்சின் மீட்டல் விளைகின்றது. மறுகூட்டலைச் சுண்டிவிடத்தான் கலைஞனிடம் கலையின் ஒப்படைப்பு எதுவுமே யாருக்கும் சொந்தமல்ல. எல்லாம் வாழ்க்கையின் நதியோட்டத்தில் கடலில் கலக்க வேண்டியவைதாம்.

ஆகையால், ராமன், கிருஷ்ணன், இயேசுவிடமிருந்து ஜே. கிருஷ்ணமூர்த்தியையும் இப்போதைக்கு) தாண்டி, நானும் நீயும் வரை, தற்செயல்கள் அல்ல. அத்தனையும், அனைவரும், பாற்கடலின் கடையலில் கிடைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/125&oldid=1533977" இலிருந்து மீள்விக்கப்பட்டது