பக்கம்:பாற்கடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

7


பத்திரிகையில் ‘எங்கள் வீடு' என்கிற தலைப்பில், இன்னும் கொஞ்சம் தாராளமான இடத்தில் - ஆனால் அதுவும் ஒரு ஆரம்பம்தான் - என் கட்டுரை வெளிவந்தது. அதற்குரிய பாதிப்பையும் விளைவித்தது.

அந்த அடிப்படையில் கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி சொன்னார்: "உங்கள் எழுத்துலகத்தைப் பற்றி நீங்களே ஏன் எழுதக்கூடாது? நம்முடைய இருபத்துஐந்து வருடத் தொடர்பில் அதுபற்றி நாம் எவ்வளவு பேசியிருப்போம்! வேணுமானால் நானே அவ்வப்போது அடியெடுத்துக் கொடுக்கிறேன். கணிசமான ஒரு புத்தகத்துக்கு விஷயமிருக்கிறது. நானே அதை வெளியிடுகிறேன்.”

நல்ல யோசனைதான். ஆனால் கதை அல்லாத நீண்ட பாடு (Non-Fiction) எனக்கு ஒரு புது அனுபவம். எப்பவுமே நேரிடையாகப் புத்தகத்தில் இறங்குவது எனக்குச் சுலபமாக இல்லை. பாதிக்கிணறு தாண்டலில் சில முயற்சிகள் இன்னும் முடிவுறாமல் நிற்கின்றன. முதலில் அத்தியாயமாகப் பார்க்கக் கிடைக்கட்டும். புத்தகம் தன்னை கவனித்துக் கொள்ளும்.

இந்த அத்தியாய வாய்ப்பு அமுதசுரபியில் நேர்வதற்கு ஒரு நியாயமிருக்கிறது. சுரபியின் பிறப்பிதழில் என் கதை வெளியாயிற்று. குழந்தையின் தொட்டிலை ஆட்டியவர்களில் நான் ஒருவன். சுரபிக்கும் எனக்கும் நீண்ட சொந்தம். ஒருகாலத்தில் அமுதசுரபியின் ஆஸ்தான எழுத்தாளன் என்றே எனக்குப் பேர் உண்டு. அதன் சக்கரத்துடன் என் எழுத்தின் விதியும் இணைந்திருந்ததுண்டு.

"ஐயோ பிஸ்கே! இவ்வளவு பிரமாதம் பண்ணிக்க என்ன இருக்கு? இப்போ யார் எழுதவில்லை? அந்தந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/13&oldid=1532900" இலிருந்து மீள்விக்கப்பட்டது