பக்கம்:பாற்கடல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

லா. ச. ராமாமிருதம்


ஈடுபாடு, பக்தி, விசுவாசம் வேண்டும். பழகப் பழகப் பக்குவநிலை எய்தும். பேச்சின் வியர்த்தம் அறிந்தபின், பேச்சு கீச் கீச்சுதான்.

கொட்டாங்கச்சியில் தண்ணீரும், பக்கத்தில் ஊசியும் கதையில் மூன்று விஷயங்கள் புலனாகின்றன.

ஒரு பருக்கைகூடச் சிந்தாமல் ஒருவன் வாழ்நாளின் கடைசிவரை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு பருக்கைகூடச் சிந்தாமல் ஒருத்தி, அவள் வாழ்நாளின் கடைசிவரை பரிமாறினாள்.

ஒரு பருக்கைகூடச் சிந்தாமல் சாப்பிடுவது சௌந்தர்ய உபாசனை.

இதுபற்றி ஒருவருக்கொருவர் எப்படித்தான் இருக்க வேண்டும் என்று, முன்கூட்டிச் சொல்லிக் கொள்ளவுமில்லை. அதனால் கொட்டாங்கச்சியில் தண்ணீரும், பக்கத்தில் ஊசியும், நிகழ்ந்து கொண்டேயிருந்த சௌந்தரியத்துக்குச் சாக்ஷியாக நின்றுவிட்டன.

எழுத்தாளன், வாசகன், இடையில் எழுத்து - இந்த உறவும் இப்படித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/132&oldid=1533984" இலிருந்து மீள்விக்கப்பட்டது