பக்கம்:பாற்கடல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9

நான் பிறப்பதற்கு முன்னரே இறந்துவிட்ட என் அம்மாவைப் பெற்றவளுக்கு அத்தியாயமே ஒதுக்கி விட்டபின், நான் நன்கு அறிந்தவள், என் தந்தையைப் பெற்றவளைப் பற்றி எழுதாவிடின், நான் நன்றி கொன்றவனாவேன் என்பது மட்டும் அல்ல. நான் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் நோக்கமும் கலையும் தவறினவனாவேன்.

பெரியோரைப் புகழ்வோம்.

மன்னிப்பாட்டியின் செல்லத் 'தீவட்டி' நான். ஆனால் அவள் போனபின், பேரன் நான் அவளுக்கு நெய்ப்பந்தம் பிடிக்கக் கொடுத்து வைக்கவில்லை. அவள் மரணத்தின்போது அவள் பக்கத்தில் நான் இல்லை.

காஞ்சிபுரத்துக்கு (பழைய கணக்கு) ஐந்து மைல் - சென்னைக்கு நாற்பது மைல் தூரத்தில் ஐயன்பேட்டை (அப்போது) கிராமத்தில் வாத்தியார் வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பா (அண்ணா)விடம், மன்னி (பாட்டி) இறந்தாள். அந்தச் சமயத்தில் சென்னையில் வாஹினி பிக்சர் (லிமிடெட்)ளில் எனக்கு டைப்பிஸ்ட் வேலை. மன்னி சாகும் தறுவாய் சேதி இருமுறை வந்து, போய்ப் பார்த்துவிட்டு வந்தபின் –

பாட்டிக்குப் புலன்கள் ஒவ்வொன்றாய் ஒடுங்கி விட்டன. "மன்னி, இதோ ராமாமிருதம் வந்திருக்கேன்! மன்னி, இதோ என் முதல் சம்பளம் (அது முதல் சம்பளமல்ல). கையில் வாங்கிக்கொள்ளுங்கள். மன்னி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/133&oldid=1533985" இலிருந்து மீள்விக்கப்பட்டது