பக்கம்:பாற்கடல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

லா. ச. ராமாமிருதம்


இதோ நமஸ்காரம் பண்றேன்.” கண்களில் பார்வை போய்விட்டது. கைகள் என்னை ஆசியில் தொடத் துழாவி, ஸ்பரிச உணர்வும் அற்றுவிட்டதோ என்னவோ, கூப்பிக்கொள்கின்றன. உள்நினைவு மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது.

போய்ப் பார்த்துவிட்டு வந்தபின், மன்னி செத்துப் போய்விட்டாள் என்று ஆள் வந்ததும் லீவு கேட்டதும் மானேஜருக்குக் கோபம் வந்துவிட்டது. ”உனக்கென்ன, பாட்டிங்க செத்துப்போய்க்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கும் வேலையில்லை, உனக்கும் வேலை யில்லை” என்கிறான்! வயிற்றுப்பிழைப்பு என்னென்ன வெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது! முறைத்துக்கொண்டால் நான் நடுத்தெருவில், சுளை சுளையா ரூபாய்கள் இருபத்தைந்து. மாதம் சம்பளம், குடும்பம் அப்போது தத்தளித்துக்கொண்டிருந்தது.

”இந்தக் குடும்பம் என்றைக்குத் தத்தளிக்கவில்லை?” கேலிக் கொக்கரிப்புச் சிரிப்பு கேட்கிறது.

(சிரிப்பு எங்கள் உரிமை)

ஞாயிற்றுக்கிழமைகூட வந்தாகணும். பேருக்கு அரைநாள். அந்த வேலையுள் முழுநாளின் சாறு வேறு சக்கை வேறாகப் பிழிந்தாகிவிடும். என் நாள் காலை 9-30 மணியிலிருந்து இரவு எட்டு - எட்டுக்கு மேல் அதன் ஒட்டுக்கள் அன்றன்று எம்மட்டில் நின்றனவோ, அதுவரை. O.T.? அப்படி என்றால் என்ன ? அப்பவே சீட்டைக் கிழித்துக்கொள்ள வழி ”மன்னிச்சுக்கோங்கோ ஸார் தெரியாமல் கேட்டுவிட்டேன் ஸார்.”

'ஸாரி தம்பி, இது உன் தப்போடு போகல்லே. இந்த எண்ணம் மத்தவங்ககிட்ட புரையோடாமல் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/134&oldid=1533986" இலிருந்து மீள்விக்கப்பட்டது