பக்கம்:பாற்கடல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

லா. ச. ராமாமிருதம்


மணமாகும் வரை பெற்றோர், மணம் ஆனபின் புக்ககம், கணவனுக்குப் பின் பிள்ளைகள் - ஆகவே அண்டிப் பிழைப்புதான். உன் வாழ்வின் வழி, நோக்கம், விடிவு முடிவு எல்லாமே - இந்த அடிப்படையில்தான் சொல்லிலும் செயலிலும் பெண்டிருக்கு அந்தக் காலத்து புத்திமதிகள்,

உளைமேல் நடக்கிறேன். எனக்கே தெரிகிறது. எந்த நிமிடம் அடி பிசகிச் சேற்றில் விழுந்து மூழ்கி விடுவேனோ? பயமாயிருக்கிறது.

பெண்டிர் ஆண்டு கொண்டாடி ஆகிவிட்டது.

பாரதி நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருக்கிறது.

மேற்கண்டதைப் படித்து, புதுமைப்பெண் படை என்மேல் வெகுண்டு எழும் பயத்தில் ஒடுங்குகிறேன். நான் என் செய்ய? யார் கட்சியும் நான் பேசவில்லை. அந்நாள் சமுதாயம் பெண்டிருக்கு மனமே இல்லாமல் போக அடித்தது நியாயம் என்று கூறவில்லை. அந்நாளின் நடப்பு இப்படி என்று சொல்கிறேன். கூடவே அந்தச் சாக்கில் இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. மன்னியின் சூழ்நிலையில், அவளுக்கு மனம் என்று ஒன்று இருந்தால் நினைத்து வாடிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான். மனம் அவளுக்குக் கட்டுப்படியாகாத சொகுசு. அவளுக்குள் இருந்ததற்குள். நல்ல வேளை, அதையும் அவள் அறியாததுதான்.

வீட்டுக்குப் புதுப்பெண் வந்தவுடனே, அவளை அடுக்குள்ளில் அடைத்தார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. அம்முவினம் பெண்களைச் சிறை வைக்கும் குடும்பமல்ல. அது அவர்கள் இயற்கை அல்ல. ஆனால் வந்தவளுக்குத் தனிச் சலுகை கிடைத்திருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/138&oldid=1533989" இலிருந்து மீள்விக்கப்பட்டது