பக்கம்:பாற்கடல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

லா. ச. ராமாமிருதம்


ஆனால் இந்த ராமசுவாமிக்கு இந்தச் சீதாலட்சுமியிடம் அதே பரஸ்பரம் நேர்ந்ததோ ?

தோற்றத்தைக் கண்டு ஏமாறாதே.

நிறம் பார்க்காதே, குணம் பார்.

பார்யா ரூபவதி சத்ரு.

இந்தக் கோட்பாடுகளின் கண்களுடன், ராம சுவாமிக்குச் சீதாலக்ஷ்மியைப் பார்க்க முடிந்ததா? அவர் ஏற்பாடு பண்ணிக்கொண்ட லக்ஷ்மியைத்தான் கேட்க வேண்டும். அவரையே கேட்டால் –

”நிகரில்லா நேசமடி இது

மோசம் மோகம் எனக் கேதுக்கடி?”

என்று கவி பாடியிருப்பாரா?

மன்னியைக் கேட்டிருந்தால் எதுவும் சொல்லியிருக்கமாட்டாள். மௌனமாய் அநுபவிப்பதில் அவள் வல்லவள் இல்லை. மௌனம் அவள் பாஷை அல்ல. அவள் சதை.

ராமசுவாமி.

சீதாலக்ஷ்மி.

பெயரோடு ஒற்றுமை சரி.

ஆனால் ஜோடி சேர்க்கும் பெரியவர்களுக்கு இந்தப் பொருத்தம் ஒன்றே போதும். இதுவே மாபெரும் சகுனம். உடனே அடுத்துச் சகுனம் காட்டும் பதவி.

மன்னிப் பாட்டியை நான் நினைப்போடு பார்க்கும் போது எனக்கு வயது ஐந்து. அவள் அறுபதுக்குள் நுழைந்துகொண்டிருந்தாள். நெற்றியில் தகடு அளவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/142&oldid=1534009" இலிருந்து மீள்விக்கப்பட்டது