பக்கம்:பாற்கடல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

137


பிரகாசித்த குங்குமத்தையும் வெண்பட்டுப் போல் மின்னிய கூந்தலையும் தவிரத் தனியாக எனக்கு வேறு தெரியும் வயது அல்ல அப்போ நாளடைவில் உப்பும் தண்ணியும் காரமும் உடம்பில் எனக்கு ஊற ஊற அவளைத் தனியாகவும் தாத்தாவோடும் சேர்ந்து பார்க்கையிலும் பிறர் சொல்வதைக் கேட்பதையும் வைத்துக்கொண்டு அவள் தன் சிறிய வயதினில் ஆகிலும் சரி - உற்ற வயதிலும் சரி எப்படி இருந்திருப்பாள் என்று அனுமானிக்க முடிந்தது. என் பாட்டியைப் பற்றி வேறு ஏதும் சொல்ல நான் தயாராயில்லை. இது பாற்கடலா? அக்கப்போரா? அவள் கூன், குருடு, செவிடு, ஊனம் இல்லை.

ஒன்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்கிறேன். தோற்றத்தைப் பொறுத்தவரை அம்முவாத்து இனத்துக்கு நேர் எதிரிடை. படிப்பா, எழுத்தா, வாஸனை கிடையாது. சரியான உழவு மாடு. இந்தச் சம்சாரத்துக்கு அவளைப் போல உழவுமாடுதானே சரிப்படும்.

கல்யாணங்கள் சுவர்க்கத்தில் ஏற்பாடாகின்றன.

காவல்கள் இங்கு எப்படியோ ஆகிவிடுகின்றன. வியப்பும் அதில்தானே இருக்கிறது. ”போகப் போக எல்லாம் சரியாப் போயிடும்.”

சண்டையோ, பூசலோ, உதையோ, குத்தோ, ஆசைக் கிழத்தி லக்ஷ்மியோ இத்தனை நடுவிலும் சப்தரிஷி, அமிர்தகடேசன், அகிலாண்டம், ஸ்ரீமதி, கார்த்திகேயன் தவிர இவர்களுக்கிடையிலோ முன்னாலோ கணக்குத் தீர்ந்துவிட்டவை இரண்டு.

கொழுந்தன் மைத்துனன்மார்களுக்குக் கல்யாணமாகி, ஓரகத்திகள் ஒவ்வொருவராய்ச் சேரச் சேர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/143&oldid=1534010" இலிருந்து மீள்விக்கப்பட்டது