பக்கம்:பாற்கடல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

143


ஏற்கெனவே, மிளகாய்ப்பொடி, மத்தியான சாம்பார், இப்போ தேங்காய்ச் சட்டினி. இது போறாதா ?”

மன்னி, நீங்கள் மனுஷியா? மாடா ? மெஷினா?

மன்னி பழங்காலக் கட்டை இல்லாவிடில், அந்த வயதில், அந்தச் சுமைக்கு ஈடு கொடுக்க முடியுமா? இந்தக் காலத்து நாரிமணிகள் அந்த உழைப்பை நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா?

மன்னி பாதங்களில் நொத நொதவென்று சேற்றுப்புண். காலில்தான் வந்து கண்டிருக்கிறோம். கையில் சேற்றுப்புண் யாரேனும் பார்த்திருக்கிறீர்களோ? விரல்களின் இடுக்குச் சதையை அரித்துவிட்ட இடத்தில் ஒரு குழிப்புண்ணே விழுந்திருந்தது.

மன்னி கையால் சாப்பிடவே வெறுப்பாயிருக்கும். ஆனால் வேறு வழி? சமையல்காரி தனியாகப் போட முடியுமா?

சித்திக்குக் கட்டுக் கட்ட வரும் வைத்தியன் அல்லது கம்பவுண்டர், “என்ன பாட்டி, உங்கள் கையையும் காலையும் இப்பிடி வெச்சுக்கிட்டு இருந்தால், மத்தவங்களுக்கு நீங்கள் செய்யறது எப்பிடி?” என்று அவனாகப் பார்த்து மருந்து கொடுத்தாலாச்சு, தானாகக் கேட்பாளா? மாட்டாள். ரோசம் காரணமல்ல. ஏற்கெனவே அம்பி கஷ்டப்பட்டுண்டிருக்கான். நான் வேறு செலவு வைக்கணுமா? இதுதான் அவள் போக்கு.

அல்லது கேட்கவே தோன்றாது.

சித்திக்கு இனி விமோசனமே இல்லை. அவளுக்கே அது தெரிந்துவிட்டது. குடித்தனக்காரர்கள் ஒருவருக்கொருவர் கிசுகிசுத்தனர். யார் வத்தி வைத்தனரோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/149&oldid=1534059" இலிருந்து மீள்விக்கப்பட்டது