பக்கம்:பாற்கடல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

லா. ச. ராமாமிருதம்


வீட்டுக்காரன் ஒருநாள் வந்து, எங்கள் கட்டுக்குள் வந்ததும் அவனுக்கு மூக்குத் தண்டு சுருங்கிற்று - சித்தப்பாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், அவரோடு கிசுகிசுத்தான்.

சித்தப்பா சித்தி, குழந்தைகளை மன்னியோடு ஐயன்பேட்டைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். அது கிராமாந்தரம். அங்கே கேட்பார் கிடையாது. உதவியாகக்கூட இருப்பார்கள். அம்மா இருந்தாள். வேலைக்காரி இருந்தாள்.

மன்னிக்குக் கையிலும் காலிலும் சேற்றுப்புண் அத்தரதையாக மறைந்துபோயிற்று - வந்ததா என்று சந்தேகப்படும்படி உடம்பில் சதை பிடித்தது. பழங்காலத்துக் கட்டை, இப்போதுகூட அதற்குத் துளிர்க்கச் சக்தி இருந்தது.

இறக்கையிலும்கூட, சாக்குக்கேனும் ஏதேனும் நோய் என்று மன்னிக்குக் காணவில்லை. வயது, அங்கங்கள் ஓய்வு, படிப்படியாக ஒவ்வொன்றாய்ப் புலன்களின் ஒடுங்கல். கடைசிவரை உள் நினைவு. அதுவும் அதன் வேளையில், எண்ணெய் காய்ந்த திரிபோல் அணைந்து போயிற்று. வியாதிக்கும் உடலுக்கும் போராட்டம் என்கிற நிலையே இல்லை. பெட்ரோல் தீர்ந்துவிட்டது. வண்டி நின்றுவிட்டது. மன்னி விடுதலை அடைந்தாள்.

இந்தக் கட்டத்தில் எங்கள் மன்னியை இப்படி விட எனக்கு மனமில்லை. அவள் மஞ்சளும் குங்குமுமாக இருந்த வருடங்களுக்குச் சற்று முன் இழுத்துச் செல்கிறேன். சென்னையில், ராயப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில், பின்கட்டுப் பூரா வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அண்ணா சித்தப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/150&oldid=1534060" இலிருந்து மீள்விக்கப்பட்டது