பக்கம்:பாற்கடல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

145


கூட்டுக் குடும்பம். ரூ 15-க்குக் கடல்போல் இடம். ஆஸ்துமாக் கொடுமையில் கிராமத்துக்குத் தள்ளப்படும் முன் அண்ணாவின் சம்பாதனையின் பொற்காலம் அது. எங்கள் குட்டி சித்தப்பா பையன், நாங்கள் குழந்தைகள், குடும்பம் பச்சையாக வாழ்ந்த காலம்; மன்னியின் சந்தோஷ காலமும் அதுதான்.

மன்னியின் சந்தோஷந்தான் என்ன? ராமஜபம். ராம ராம ராம. அப்புறம் 'ஆபதாமப ஹத்தாரம்... அப்புறம் ஒன்றிரண்டு ஸம்ஸ்கிருத வாக்கியத் தொடர். அவைகளும் ராம தோத்திரந்தான். தன் தந்தையிடம் கற்றுக்கொண்டதோ என்னவோ. ஒருவாறு அவைகளின் நிரடல்களினின்று, தட்டுத்தடுமாறி மீள்வாள். அப்புறம் தாத்தா இயற்றிய பெருந்திரு ஸ்தோத்திரம்.

ஸ்நானம் பண்ணிவிட்டு, உட்கார்ந்தாளெனில் குறைந்தது மூணு மணிநேரம் ஆகும். அப்புறம் சாப்பாடு. அந்தக் காலத்து மனிதர்களின் சாப்பாட்டுக்கும் இப்போதைய கொரிப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு காலை நீட்டிக்கொண்டு, மெதுவாக - பல் வேறு இல்லை - வெண்கலப் பானை காலியாகும். அப்படிச் சாப்பிட்டதுதான் அவளுக்குப் பின்னால் அவவளவு தாங்க உரம் தந்தது.

இரண்டு வேளை திடமான சாப்பாடு. போதும். விரதம், பட்டினி, பலகாரப் பாட்டி அல்லள். கோயில், குளம், ஸ்தலம் என்று தேடி அலைபவள் அல்லள்.

பிற்பகலில் இருந்தால் நொறுக்குத் தீனி. அதுவும் அவளுக்கு அவசியமில்லை. பொக்கை வாயில் மென்று அரைத்து உள்ளே செலுத்துவதற்குள் பேரக்குழந்தைகள், நாங்கள்தான், எங்கள் பங்கை எப்பவோ காலி பண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/151&oldid=1534061" இலிருந்து மீள்விக்கப்பட்டது