பக்கம்:பாற்கடல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

147


உழைப்பும், கஷ்டமும், சோதனைகளும் ஆயுள் தண்டனையாக அவள் விதியின் தீர்ப்பாகி விட்டபின், அந்த நிலைமையுடன் சமாதானமாகிவிட்ட பலனாக, பொறை அவள்மேல் பூஷணமாக இறங்கிவிட்டதா? பிறகு அதுவே கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடிய வில்லையா? இதுபோன்ற சகிப்புத் தன்மையைத்தான் ஆண்டவன், ஜன்மாவிடம் எதிர்பார்க்கிறானா? மன்னி மஹிமைதான் என்ன !

இப்போது தெரிகிறது. அவளுடைய ஸர்வ ஸாதாரணந்தான் - அதுதான் இந்தக் குடும்பத்தின் அத்தனை புத்திசாலிகள், கெட்டிக்காரர்களின் 'குட்டு'களுக்கும் முட்டல்களுக்கும் முட்டுக் கொடுத்துக் குடும்பத்தை வழிப்படுத்தியிருக்கிறது.

மன்னியை மனத்தில் வைத்துக்கொண்டு நான் பேசும் இந்தச் சர்வ சாதாரண நிலையில், மக்குக்கும், மஹானுக்கும் வித்தியாசம் சாத்தியம் இல்லை.

'பெரியோரைப் புகழ்வோம்.' இந்தச் சங்கல்ப ரீதியில், இந்த வரலாற்றில் இதுவரை வந்துபோனவர்கள், இனிமேல் வரப்போகிறவர்கள், எல்லாரைக் காட்டிலும் மன்னிதான் மிகப் பெரியவள்.

சிந்திக்கச் சிந்திக்க இந்த எண்ணம்தான் உறுதியாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/153&oldid=1534063" இலிருந்து மீள்விக்கப்பட்டது