பக்கம்:பாற்கடல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

லா. ச. ராமாமிருதம்


வருவேன்...' ஐம்பது தடவை என்று சித்தப்பாவைப் பணித்தார்.

உடனே மாணவன் இந்தாங்கோ சடாரென்று ஒரு நோட் புத்தகத்திலிருந்து இரண்டு ஏடுகளைக் கிழித்துத் தந்தான்.

வாத்தியார் உள்பட வகுப்பில் எல்லோரும் திணறிப் போயிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாத்தியார் சமாளித்துக்கொண்டு, சரி பாடங்களை ஒழுங்காக வகுப்பில் கவனிப்பேன் நூறுதரம்.

'இதோ, இதோ - நோட்டுப் புத்தகத்திலிருந்து இன்னொரு நான்கு ஏடுகளை - ஏதோ காசோலை கிழிக்கிறமாதிரி.

”நிஜமா, பொய்யா, இதற்கென்ன ருசு?” சாக்ஷிக் கூண்டில் நிறுத்தாதீர்கள். சித்தப்பாவின் பிரதாபங்களைச் சூழ்ந்த கதைகளில் இது ஒன்று. மன்னன் செக்கச்செவேலென்று சுந்தரபுருஷன். அந்திம நாட்களில் விபூதி சந்தனம் குங்குமம் பூஜை புனஸ்காரம் - இவரா அப்படியெல்லாம். ? என்று நம்பமுடியாத வகையில் மாறிவிட்டார். ஐம்பதே தாண்டினாரோ இல்லையோ? நிற்க. இது ஒரு பழைய ப்ரயோகம். பண்ணிப் பார்க்கிறேன். ஹூம், கூர்மையிருக்கிறதே!)

பத்திரிகை எழுத்து நிலவரம் இப்படித்தானாகி விட்டது.

மாறுதல் அவசியம்தான். மாறுதல்தான் உயிரின் நியதி. உயிரின் வலுவுக்குச் சான்று. தேக்கமற்ற ஓட்டத்திற்கு உறுதி. ஓட்டமிருந்தால் மட்டும் போதாது. கடையல் காணணும். கங்கையைக் காட்டிலும் யமுனைக்கே சீறல் கூடவாம். சீறல்சுழல்கள், சுழிப்புகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/16&oldid=1532904" இலிருந்து மீள்விக்கப்பட்டது