பக்கம்:பாற்கடல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

லா. ச. ராமாமிருதம்


வீட்டுள் சரியாக முகூர்த்த வேளைக்கு நுழைந்துவிட்ட மாதிரி ஓர் உணர்ச்சி. அந்த முதல் சமயம் நெஞ்சில் பதிவானது மதுரை எனும் ஊர் அல்ல. ஆலந்தூர் சகோதரர்கள் ஸ்ரீராகத்தில் ஒரு பாட்டுப் பாடுவார்கள்.

“நாம குஸும...”

அந்தப் பாட்டை அவர்களிடம் கேட்கும்போதெல்லாம் என் மனக் கண்ணில் ஓர் உருவம் எழும். ஓர் அழகிய பெண், பின்கச்சை தெரிய மாத்வக் கட்டு கட்டிக்கொண்டு இடுப்பில் குடத்துடன் குலுக்கி நடந்து.

அதுபோலவே, மதுரையெனும் பட்டணத்தின் ஜீவன் திரண்டு, ஒரு மாது ஆகி, கொண்டையில் மல்லி, கழுத்தில் மல்லிகை மாலை, முழங்கையில், கைகளில் கால்களில் மல்லிகைச் சரங்கள்...

அதோ அவள், கூடம் கூடமாக அமைந்த வீதிகளின் நடுவே பெருமிதத்துடன் எழும் நாற்கோபுரக் கோயிலுள் ஆள்கிறாள். கூண்டுகளுள், கோபுரங்களின் ஸ்தூபிகளின் மேல் பச்சைக்கிளி தத்தித் தத்தி.

”மீனாக்ஷி!”

தடாதகைப் பிராட்டி, பாண்டிய ராஜகுமாரி.

உள்ள நெகிழ்ச்சி, மதுரையை அப்போது, அப்படிப் பார்க்க வைத்தது.

எந்த வீட்டு மொட்டைமாடிமேல் நின்று பார்த்தாலும், பெரிய கோபுரம் ஒரு பக்கம்.

அதற்கெதிரே திருப்பரங்குன்றக் கோபுரம். இரவு வேளையில் வான நட்சத்திரங்களை பூமியில் தூவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/160&oldid=1534070" இலிருந்து மீள்விக்கப்பட்டது