பக்கம்:பாற்கடல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

155


விட்டாற்போல், பொட்டுப் பொட்டாய், சிறிதும் பெரிதுமாய் வெளிச்சங்கள். மதுரையா? கலியாணக் கோலமா ?

ஒரு சமயம் மதுரையின் தெருக்களில் வழி தப்பி விட்டது. எங்கோ அவசரமாகப் போய்க் கொண்டிருக்கும் ஓர் ஆளைத் தடுத்து, ‘வடக்குச் சித்திரை வீதிக்குப் போவது எப்படி?’ என்று கேட்டதற்கு, ‘என்னோடு வாங்க என்று அவர் தன் காரியத்தையும் விட்டுவிட்டு என்னை, என் அடையாளங்களைத் தெருவில் கண்டு பிடிக்கும் இடத்தில் விட்டுவிட்டுத் திரும்புகையில், நான் அவர் எனக்காக எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி தெரிவித்தபோது, “இது என்ன பிரமாதம்? இந்த மட்டும் கூட இல்லாவிட்டால், மதுரையின் தமிழ்ப் பண்பு என்ன ஆச்சு? எப்பவும் ஒன்று வெச்சுக்கங்க. கோயில் நகரத்தின் மையத்திலிருப்பதால் அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு எந்த இடத்துக்கும் போய்ச் சேர்வது சுலபம். மதுரை வாழ்க்கையே கோயிலைச் சுற்றித்தான் இயங்குது - வாரேன் ஐயா!” என்று என் பதிலுக்குக் காத்திராமலே வேகமாகத் தம் வழியில் போய்விட்டார்.

நான் கொஞ்ச நாழி இன்ப ரகஸ்யத்தில் ஸ்தம்பித்து நின்றேன். 'மதுரையின் வாழ்க்கையே கோயிலைச் சுற்றித் தான் இயங்குது!’ பக்தியில் சொன்னாரா? இருப்பதைச் சொன்னாரா? வேடிக்கையாகச் சொன்னாரா? எதுவாயிருந்தாலும் அத்தனையும் பொருந்தும் பூடகம். இவ்வார்த்தைகளையே மீனாகூழிக்கு அணிகலனாயும் கொள்ளலாம். காதில் தாடங்கமாக! கை விரல் மோதிரமாக !

இன்றும் அவள்தான் ஆட்சி புரிகிறாள். இப்பவும் தெருக்களில் இட்டிலிக் கடைகள் வியாபாரம் சுறு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/161&oldid=1534071" இலிருந்து மீள்விக்கப்பட்டது