பக்கம்:பாற்கடல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

157


கிடைக்கும் என்று புரட்டிப் பார்க்கின்றன. மீனாக்ஷியின் மதுரையா இது?

நானே என்னை அறியாமலே Realism எழுத்தில் இறங்கிவிட்டேன். இந்த அவலத்தை விவரிப்பதற்கு - உள்ளதை உள்ளபடி, பார்த்ததைப் பார்த்தபடி - பாடுவதற்குத்தான் எழுத்தெனும் வாத்தியமா? எனக்குத் தலை சுற்றுகிறது. எங்கேனும் உட்கார இடம் - சுற்றிப் பார்க்கிறேன். எங்கே இடம் தெருவெல்லாம் கடை பிளாட்பாரம் எல்லாம் கடை, வெயில் பிளக்கிறது.

"சரிதான், நீ என்ன சுவர்க்கத்திலிருந்து நேரே இறங்கி வந்துவிட்டாயோ? வா, வா, இன்னும் ஐந்தாறு வருடங்களில் உன் அம்பத்தூரை என்ன பண்ணுகிறேன் பார்!” மனத்துக்குள் ஏதோ கேலிக் கொக்கரிப்பு கேட்கிறது. இது யார்? பாற்கடலை தேவர்களுடன் சேர்ந்து கடைந்த அமுதத்தைக் கோட்டை விட்ட அரக்கருள் ஏமாறாத இருவரில், இது ராகுவா ? கேதுவா? அமுதத்தை உண்டதால் அவர்களுக்கும் அழிவில்லையே? ஏமாந்த அரக்கர் குலத்தைப் பழிவாங்க வாரிசுகளாக - சாகா வரம் பெற்றுவிட்ட வாரிசுகள் அவர்கள்தானே? ஆகையால் இந்தப் பழிவாங்கும் போராட்டமும் சாகாவரம் பெற்றுவிட்டது. ஆகவே –

தினசரி வாழ்க்கைப் போராட்டத்தை மறக்க Escapist எழுத்து.

அல்லது

உள்ளது உள்ளபடி, இதுவேதான் உண்மை என்று அவலத்துக்கும், அருவருப்புக்கும் முரசு கொட்டும் Realism எழுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/163&oldid=1534266" இலிருந்து மீள்விக்கப்பட்டது