பக்கம்:பாற்கடல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

லா. ச. ராமாமிருதம்


யிட்டு, மன்னி மேலும் வரன் தேடும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஆனால் மன்னிப் பாட்டி அவ்வளவு சுலபமாக விஷயத்தை விடுபவள் இல்லை. "சின்னவாளோடு பெரியவாளும் சேர்ந்துண்டு எப்போ என் பிள்ளை அம்மாப் பெண்ணுக்குன்னு தீர்மானமாயிடுத்தோ அகிலாண்டத்தை ஹாலாஸ்யம் பண்ணிக்கணும்' என்று கண்டிஷனைக் கொண்டு வந்தாளே பார்க்கணும்!

மாமா திக்குமுக்காடிப் போனார்? மல்யுத்த பாஷையில், இது கத்திரிப் பிடியா? நண்டுப் பிடியா? கராட்டேவில் இது என்ன வெட்டு?

மாமா அப்போதுதான் உத்தியோகத்தில் (கோயமுத்தூர்) காலெடுத்து வைத்திருக்கிறார். இனிமேல் இரு தம்பிகள் தலையெடுத்தாகணும். அம்மாவைப் பிரிந்த கண்ணீர் இன்னும் குழந்தைகள் கன்னத்தில் காயவில்லை. வாளிப்பாகத் தங்கை கல்யாணத்துக்குக் காத்திருக்கிறாள். தாயுமில்லை. தகப்பனுமில்லை. வளர்ந்த இடத்தை விரோதித்துக்கொண்டு, தன் இஷ்டப்படி விடிவு கண்டு கொள்வதென்பது இப்போதைக்கு நடக்கிற காரியமா?

"மன்னி கேட்பதில் என்ன தவறு? நன்றி என்று ஒன்று கிடையாதா?” மன்னி கேட்டாலும் கேட்கா விட்டாலும் கிராமத்தில் வக்காலத்து வாங்குபவர்களுக்குக் குறைச்சலா? வாசல் திண்ணை கட்டியிருப்பது வழிப்போக்கர்கள் தங்குவதற்கு என்று பேச்சு. ஆனாலும், பயன்படுவது பஞ்சாயத்துக்குத்தானே! அதுவும் கேட்காத பஞ்சாயத்துக்கு.

நீதிகளை (நம் நாட்டைப் பொறுத்தவரை) மனு வகுத்திருக்கலாம்; ஆனால் நியாயம் வந்த வழி அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/168&oldid=1534271" இலிருந்து மீள்விக்கப்பட்டது