பக்கம்:பாற்கடல்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

163


காரணம்: முதலில் பேச்சுக்கு ஒரு சந்தர்ப்பம், பிறகு சந்தர்ப்பத்துக்கு ஒரு சந்தர்ப்பம்! எல்லா நியாயங்களுமே சந்தர்ப்ப நியாயந்தான் என்பது என் துணிவு. இந்தச் சந்தர்ப்பத்துக்கு என்ன பொருந்தும்?’ என்பது தான் அடிப்படைச் சட்டம்.

இஷ்ட நியாயத்துக்கும் சந்தர்ப்பத்தை மொழி பெயர்க்கச் சட்டப் புத்தகங்கள் இருக்கின்றன. சட்டத்தை முறுக்கிப் பேசவேதான் அதற்கென்றே படிப்பு. அப்படியும் முடியாவிட்டால் சட்டத்தையே மாற்றி அமைத்தால் போகிறது. அந்த அளவுக்கு நீதி இடம் கொடுக்கிறதோ இல்லையோ, சட்டத்திலேயே இடம் வைத்துக்கொண்டுதான் சட்டம் எழுதியாகிறது. சொல்லி ஆகிறது. ஆகவே சட்டத்தின் அடிப்படை, வழக்கமாக மனத்தில் எழும் நடு நியாயமுமல்ல. நீதியுமல்ல. எல்லாமே கட்சி நியாயந்தான்.

உலகில் எத்தனை மனிதப் பிறவிகளோ, அத்தனை தனித்தனி மரங்கள், தத்துவங்கள், நியாயங்கள், கட்சிகள், நாஸ்திகம், ஆஸ்திகம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பெயர் காணாத தத்துவங்கள், ஜாபாலி, சந்தர்ப்பம், பொது (அப்படி என்று ஒரு பெயர்!) அப்புறம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்கிற நியாயத்தில் (அல்லது தத்துவமா?) மன்னி பெற்ற இரு பெண்களில் மூத்தவளின் கல்யாணப் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டு விட்டாள். மன்னி ஒன்றும் தெரியாதவள் என்று யார் சொன்னது?

மாமா, சிவப்பாக எடுப்பான மூக்கு முழியாக இருப்பார்.

அத்தை வெள்ளை நிறம், மற்றப்படி மன்னி ஜாடை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/169&oldid=1534272" இலிருந்து மீள்விக்கப்பட்டது