பக்கம்:பாற்கடல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

165


அண்ணாவுக்குப் புழுங்கும் சுபாவம், இளமையில் வறுமை, வயது முறுக்கில் திடீரென ஆஸ்துமா நேர்ந்து அதனாலேயே உத்தியோகத்தில் சறுக்கல், வியாதியின் கொடுமை - இதிலேயே உடலும் மனமும் உளுத்துப் போய்விட்டார். அவருடைய பல உத்தமங்கள் எனக்குப் படியாவிட்டாலும் புழுக்கத்தை மட்டும் ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கே தெரிகிறது. எழுத்தாளனுக்கு இன்றியாமையாத குற்றங்கள், குணக்கேடுகளில் புழுங்கலும் சுயநலமும் சேர்ந்தவை போலும்!

நினைவில் ஊறப் போட்ட பின்னர்தானே விஷயம் எழுத்துக்குப் பக்குவத்தை அடைகிறது!

அண்ணாவிடமிருந்த பொருமல் ஏன் அம்மாவிடம் இல்லை? எனக்கு இன்னும் வியப்புதான். அவருடைய சூழ்நிலையில்தானே அவளும் இருந்தாள்! கேட்கப் போனால், அவள் நிலைமை இன்னும் மோசம். சின்ன வயதிலேயே, பெற்றோர்கள் இருவரையும் இழந்தது மட்டுமல்ல, தம்பிமார் இருவர் வேறு-பிறர் தருமத்தில் வளர்ந்து - இதுபோன்ற அகதிகளுக்கு ஆண்டவன் கூடவே ஒரு விரக்தியையும் கொடுத்துவிடுவானோ? அல்லது அம்மாவுக்கு அந்த வயதில் இயற்கையாகவே அமைந்திருந்த ஆரோக்கியம் இந்தக் கவலைகளையெல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டதோ ? அல்லது இந்தக் கவலைகளையெல்லாம் படுவதற்கே அவளுக்குத் தோன்றவில்லையோ? இழைக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல், ஆனால் தாய் தகப்பனில்லாத அந்த ஒரே காரணத்தாலேயே நேரும் சிறுசிறு அலக்ஷியங்கள், கொடுமைகள், எறும்புக் கடிகள், அங்குமிங்கும் ஏவல்கள், ஏலமிட்ட வாழ்க்கை, அவர்கள் நியதியில் சேர்ந்தனவையாக, அவற்றிடையில் அநாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/171&oldid=1534274" இலிருந்து மீள்விக்கப்பட்டது