பக்கம்:பாற்கடல்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

லா. ச. ராமாமிருதம்


தினமும் ஜபமாலை உருட்டறாரே' என்று கேலி பண்ணுவாள். நாங்கள் எல்லாரும் ஒரே இடத்தில் தானே வளர்ந்தோம். ஆனால் ஒன்றிரண்டு நினைவுகள். நீண்ட இடைவேளைகளில் ஏதேனும் சந்தர்ப்ப விளைவாக அவளிடமிருந்து வெளிப்படும்போது நெஞ்சைத் தீய்க்கும்.

ஜகதீச மாமா - (வக்கீலுக்குப் படித்துவிட்டுத் தொழில் நடத்தாத வக்கீல்!)

ஜகதீச ஐயர் மனைவி வியாதிக்காரி, அடிக்கடி பிறந்தகம் போய்விடுவாள். வளத்தில் பிறந்து வளர்ந்தவள். இங்கு வந்து மாட்டிக்கொண்டது அவள் தலையெழுத்து. இடையில் பிள்ளைப்பேறு நேர்ந்து கொண்டால், கேட்கவே வேணாம். தான் போகும் போது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு போய்விடுவாள்.

மாமா, சதா வயிற்று வலிக்காரர். ஏதேனும் ஒரு நித்தியக் கோளாறு. பொரித்த ரஸம், பொரித்த குழம்பு, காரம் புளி தள்ளி, தினம் பத்தியச் சமையல், அவருடைய சுபாவத்துக்கும் முகக் கடுப்புக்கும் யாரும் அவரிடம் ஒட்டித் தங்கமாட்டார்கள். அப்புறம் யார்? ஸ்ரீமதி இந்தமாதிரி சமயத்துக்குத்தானே அவள் தாயார் பெற்றுவிட்டுப் போயிருக்கிறாள்! “அம்மாப் பெண்ணை வரவழை, சும்மாவா செய்யப்போகிறாள்? அவளோடு போச்சா? கூடவே அந்தக் கொசுறுகளும்தான் வரப் போகிறது.“

சில மாதங்கள் அவர் வீட்டில் பிழைப்பு நடக்கும். ராமசாமி மாமாவுக்கும் எங்கள் சுமையைக் கொஞ்ச நாள் தாங்கத் தேவையில்லாமல் இருப்பதே, நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/174&oldid=1534277" இலிருந்து மீள்விக்கப்பட்டது