பக்கம்:பாற்கடல்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

லா. ச. ராமாமிருதம்


எனக்கு விழி துளும்பும்.

“ஆனால், நாங்கள் எங்கே போனால் என்ன? எங்கே வாடினாலும், எங்கு செழிச்சாலும், எங்கள் தேர், லால் குடி, கீழ்த்தெருவு வடக்கே பார்த்த கோடி வீட்டில்தான் வந்து நிற்கும். பாந்தம் எங்களுக்கு இங்கேதான்; இங்கே தாரதம்மியம் கிடையாது. எல்லாரும் அடிச்சுப் பிடிச்சு, சண்டை போட்டுக்கொண்டு, அடுத்த நிமிஷமே கூடிக் கொண்டு, அந்த இரட்டைக் கடுகு விழுந்த பழையதை மன்னி பிசைஞ்சு கையில் போட, கடைசியில், “ஆச்சு, அடிக்குழம்பு யானை போல“ - யானையும் இருக்காது, பூனையுமிருக்காது, அடிக் குழம்புமிருக்காது. காலிக் கல்சட்டியைத் திருஷ்டி கழிப்பது போல் குழந்தைகள் தலைமேல் சுற்றுவாள். நாங்கள் சிரித்துக்கொண்டு ஓடுவோம். “ராமாமிருதம், அந்த நாட்கள் தனி நாட்கள் தாண்டா. கஷ்டங்கள்தான். பட்டினிகள்தான். ஆனால் அந்த ‘ஸல்லோ புல்லோ’வில் எங்களுக்குத் தனியாத் தெரியாது. சுகம், துக்கம் சேர்ந்து அநுபவிப்பதிலேயே ஒரு ஆனந்தம் இருக்குன்னுகூட நான் சொல்வேன்.“

விஷயத்தை முடிக்க மறுபடியும் பல்லவியில் கொண்டுவந்து நிறுத்துவது போலும், “அம்மாப்பெண் என்றால் பொதுவாக எல்லாருக்கும் பிரியந்தான்.“

அதை நானே கண்கூடாகத் தெரிந்துகொண்டேன், என் மூத்த பிள்ளைக்கு உபநயனம் நடந்தபோது.

அந்த உபநயனம் சம்பிரமமாகவே நடந்தது. இருபது வருடங்களுக்கு முன்னர் விலைவாசிகள் இவ்வளவு கொடுமையாக இல்லையே!

லால்குடியிலிருந்து ஒரு கூட்டமே திரண்டு வந்தது பாருங்களேன்! நான் என்னவோ மெப்புக்குத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/178&oldid=1534281" இலிருந்து மீள்விக்கப்பட்டது