பக்கம்:பாற்கடல்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

லா. ச. ராமாமிருதம்


அதன்பின்னால் அடுக்கடுக்காக இயங்கும் அதன் சூட்சும சாரங்கள்தான் முக்கியம்.

கடையலில் தற்செயலாக அமுதத் திவலை நாக்கில் தெறித்து ருசி கண்டவன் அமுதத்துக்குக் குறைந்து, எதையும் தேடமாட்டான். தேடலினின்று அவனுக்கு மீட்சியும் கிடையாது. தேடிக்கொண்டேயிருப்பான், கலைஞனுக்கு மீறிய சுயநலம் படைத்தவன் கிடையாது. வாழ்க்கையில் சுகத்திலும் சோகத்திலும் கூட அமுத கலசத்தின் தரிசனம் காண அவன் உட்கண்ணுக்குச் சக்தி உண்டு. தரிசனம் தவிர வேறு குறியும் அவனுக்கில்லை.

கடலில், கொட்டு மழையில், தன் மழைத்துளிக்கு வாய்திறந்து அதல ஆழத்தினின்று மேல் வந்து காத்திருக்கும் சிப்பி-

விடிவேளையில் மலர்களின்மேல் தங்கிய பனித்துளி மட்டுமே தன் ஆகாரமெனக் கொண்ட ஸாதகப் பக்ஷி - (என்று ஒன்று இருக்கிறதாமே!) – அதுபோல

'உத்தமம் தவிர வேறு அறியேன்' என்ற தத்துவம் வாழ்க்கையின் தினப்படி நடைமுறையிலும் உண்டு.

உத்தமம் என்பது என்ன?

சரி சரி, கேள்விகள் நீள்கின்றன. எனக்குக் கிடைத்த காட்சியில் எனக்குக் கண்ட வெறியில் என்னை மீறி வந்த ஏதோ ஏதோவைக் கொட்டிவிட்டேன்.

மேலே –

பூணூல் கல்யாணம் விமரிசையாக நடந்தது பெரிதல்ல. கையிலிருப்பதையும் கடன் வாங்கியும் காசை இறைக்கத் துணிந்துவிட்டால், பண்டங்களை வாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/180&oldid=1534283" இலிருந்து மீள்விக்கப்பட்டது