பக்கம்:பாற்கடல்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

177


“எங்களுக்கு உன்னைப்பத்தி என்னடாப்பா தெரியும் ? அம்மாப்பெண் பேரனுக்குப் பூணூல் போடறாள்னு சேதி வந்ததும் கைக்காரியங்களைப் போட்டது போட்டபடி போட்டுவிட்டு அப்படியே ரயிலேறிவிட்டோம். மறுபடியும் ஒருவரையொருவர் பார்க்கக் கொடுப்பினை இருக்கோ இல்லையோ? யார் கண்டது? பெண் வயத்துப் பேரனுக்கா, பிள்ளை வயத்துப் பேரனுக்கான்னுகூடத் தெரியாது. எங்களுக்கு அம்மாப் பெண்ணைத்தான் தெரியும்.“

அம்மாவுக்கு ஒரு mannerism. அவள் தனியாக இருக்கையிலோ, சிந்தனையில் ஆழ்ந்திருந்தாலோ பிறர் பேச்சுக்கு கவனம் கொடுக்கையிலோ, அவள் உதடுகளை இரு விரல்கள், சுட்டு விரலும் நடு விரலும் பொத்தியிருக்கும். அம்மாவின் கண்கள் என்மேல் ஆழ்ந்தன. விரலடியினின்று உதடுகள் அசைந்தன. ஆனால் எனக்கு மட்டும் கேட்டது. சேதி எனக்கு மட்டும்தான்.

“அட அசடே!”

அவ்வளவுதான். ஆனால் எவ்வளவோ அர்த்தங்கள். அவற்றில் ஒன்று, “மெனக்கெட்டு கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளணுமா?”

இதற்குள் இன்னொரு பாட்டி பழுத்த சுமங்கலி - "இந்த நாள் எல்லாம் என்ன கல்யாணச் சமையல் பண்ணறான்கள்? என்னவோ மந்தை மாதிரி பத்து, பன்னிரண்டு பேர் வரான்கள். இரண்டு பேர் அரைக்கிறான். இரண்டு பேர் நறுக்கறான். எதையோ வெந்ததும் வேகாததுமா, கால் உப்பு, அரை உப்பில், ஏற்றி இறக்கிவிட்டு அவசர அவசரமாப் பரிமாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/183&oldid=1534286" இலிருந்து மீள்விக்கப்பட்டது