பக்கம்:பாற்கடல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

லா. ச. ராமாமிருதம்


அவசர அவசரமாச் சாப்பிட்ட எச்சில்மேல் தெளித்த ஜலம் காயறத்துக்கு முன்னாலேயே, மறு பந்திக்கு இலைக்கட்டைத் தூக்கிண்டு நிக்கறான். இதிலே இனிப்பாம், காரமாம். எதுவுமே வாயில் நுழையாத பேர். ஆனால் பிட்டுப் பார்த்தால் இன்னும் வேகாத மைதா மாவு! நாங்கள் அந்த நாளில் கையால் தொடக்கூட மாட்டோம். யாராவது விசேஷம் என்னுது உன்னுதுன்னு இழுத்துப் போட்டுண்டு செய்யறாளா ? அம்மாப்பெண்ணே, நீ அந்தச் சீமந்தக் கல்யாணத்துக்குச் சமைச்சயே, அதைவிட ஒசத்தியாடீ ?”

அத்தனை தொண்டைகளிலிருந்தும் ஏகோபித்து ஒரு ‘ஹாஹாகாரம்.'

பிறகு தனித்தனியாகவும் சேர்ந்தும் விசாரித்துத் தெரிந்துகொண்டேன்.

சிதம்பர மாமா மூத்த பெண்ணுக்குச் சீமந்தம். ஏற்பாடு செய்திருந்த சமையல்கார செட், செட்டா டோக்கர் கொடுத்துவிட்டான்கள். வேறு எங்கே இரண்டு காசு கூடக் கிடைத்ததோ, இல்லை “ஹெட் சொல்லி வைத்திருந்த ‘ஸெட்' சேரவில்லையோ? இல்லை, யாருக்கு உடம்பு சரியில்லையோ? மணி ஏழாயிடுத்து 'ஜாடா'க் காணோம்.

இட்டிலிக்கு முதல்நாள் அரைச்சு வைத்திருக்கும் மாவு பொங்கி வழிகின்றது. தேடின இடத்தில் ஆள் இல்லை. சிதம்பரமையர் போலீஸ் இலாகாதான். அதிலும் அவர் ஆட்டம் தனிப் பெரிசுதான். ஆனால் இசைகேடாக மாட்டிக்கொண்டு விட்டார். பின்னால் சிக்ஷை சமையல்காரனுக்கு, நடக்கிறபடி நடந்ததோ, என்னவோ? ஆனால், இன்று, இப்போ, ஆகவேண்டியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/184&oldid=1534287" இலிருந்து மீள்விக்கப்பட்டது