பக்கம்:பாற்கடல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

189


ஒரு கோடிதான் காட்டியிருக்கிறேன். என்னால் இன்னும் சொல்லிக்கொண்டே போக முடியும். Oliver Twist, Little woman, Hunger (By Kunt Hamsun) இல்லை. நிறுத்திக்கொள்கிறேன். வெறும் பெயர்களை உதிர்த்து, நான் படித்திருக்கிறேன் என்று காட்டுவது ரஸமட்டம்.

நம் நாகரிகத்துக்கும், நம்பிக்கைகளுக்கும் வருவோமா? கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், மலையாளம்- எத்தனை விதச் சமையல்கள், தின்பண்டங்கள் - இத்தனை பிரதேசப் பக்குவங்களையும் ருசி தெரிந்தவன் ஒருவனேனும் நம்மில் உளனா? எனக்குச் சந்தேகந்தான். இத்தனைக்கும் நான் சைவ உணவு வரைக்கும்தான் சொல்கிறேன். மற்றது பற்றித்தான் எனக்குத் தெரியாதே! பழக்கப்பட்ட தமிழ்நாடு வரைக்குமே எடுத்துக்கொள்வோம். பதார்த்தங்களைத் தயாரிக்கும் வகைகளில், மாயவரத்துக்கும் தஞ்சாவூருக்குமே வேறுபாடு. தஞ்சாவூர் சமையலுக்கும் திருச்சினாப்பள்ளிக்கும் வித்தியாஸம்; திருச்சிக்கும் திருநெல்வேலிக்கும் வித்தியாஸம்; சரி சரி இந்த அத்தியாயம் வெறும் சமையல் குறிப்பாகவே ஆகிவிடப் போகிறது என்று எனக்கே அச்சம் வந்துவிட்டது.

நம் மரபை இதிகாச காலத்திலிருந்து எடுத்துக் கொண்டோமானால், விருந்தோம்பல்தான் சமுதாய வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமே. சமாராதனைகள், வன போஜனங்கள், வைக்கத்தஷ்டமி, ஊட்டுப் பிறை - சுருங்கச் சொல்லின் மீனாட்சி அம்மன் கல்யாணத்தில் மீனாட்சி அம்மனின் 64 கேள்வி. அதற்குப் பதிலென ஆண்டவன் திறந்துவிட்ட குண்டோதரப் பசியைத் தொட்டு, சிறுத்தொண்டனின் பிள்ளைக் கறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/195&oldid=1534298" இலிருந்து மீள்விக்கப்பட்டது