பக்கம்:பாற்கடல்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

லா. ச. ராமாமிருதம்


வழி 'அன்னம் அஹஞ்ச ப்ரம்மா’ என்கிற ஸுத்திரத்தில் கொண்டுபோய் விடுவதற்குள் இந்தப் பக்கங்கள் என்ன, பிரபஞ்சத்தையே ஏடாகப் புரட்டினும் போதா.

ஒரு கிழவி, கூழுக்குப் பாடியே தமிழை வளர்த்தாள்.

நம் பண்டைய வைத்தியப் புத்தகங்களில் தினப்படிக்கே ஆரோக்கிய வளர்ச்சியை முன்னிட்டு விதித்திருக்கும் உணவு விமரிசை, இந்நாளில் கட்டுப்படியாகாது. நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. உதாரணம்; பாலைக் கறந்த அரை மணி நேரத்துக்குள் காய்ச்சிச் சாப்பிட்டாக வேணும். காய்கறிகளைச் செடியினின்று பறித்த ஒரு மணி நேரத்துக்குள் சமைத்தாக வேண்டும். இல்லாவிடில் பலன் இல்லை. பைப்பாலையும் புட்டிப்பாலையும் குடித்துக்கொண்டு, கொத்தவால் சாவடியில் மூட்டையில் குமுங்கிக் கீழே கொட்டிய கோஸையும் வெங்காயத்தையும் தின்றுகொண்டிருப்பவர்களுக்குச் சாத்தியமா? விட்டுத்தள்ளு.

இதுமாதிரி ஒரு பாரா. ஏழையின் வாழ்க்கையைச் சித்திரிப்பதாக எண்ணம்:

“ரிக்ஷாக்கார முனிசாமி - (கதையில் ஏன் ரிக்ஷாக்காரன் எபபவுமே முனிசாமியாக இருக்கிறானோ தெரியவில்லை) ஸீட்டின்மேல் சாய்ந்தபடி, ரிக்‌ஷாத் தட்டில் அமர்ந்து இடதுகையில் தோசை, அதன்மேல் வைத்த கறியோடு விண்டு விண்டு வாயில் போட்டுக் கொண்டிருக்க, அவன் ஆசைக்கிழத்தி - (பகவானே, எனக்காக அவளே முனிசாமியின் மனைவியாகவும் இருக்கட்டும்) அருகில் நின்றபடி தகரக் குவளையை வீசி வீசி ஆட்டியபடி உள்ளிருக்கும் கஞ்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/196&oldid=1534299" இலிருந்து மீள்விக்கப்பட்டது