பக்கம்:பாற்கடல்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

191


ஆற்றிக்கொண்டிருந்தாள். குவளையிலிருந்து ஆவி பறந்தது.“

இதைப் படிக்கையில்: “ஆகா, என்ன தத்ரூபமான சித்திரம் என்ன realism என்ன பிரதிபலிப்பு!”

கையால் இழுக்கும் ரிக்ஷா இந்நாளில் கண்ணில் படுவது அரிது. இந்நாளில் குப்பம்மா அப்படி ஆற்றிக் கொடுத்த கஞ்சியை முனிசாமி குடிக்கிறானா என்பதே சந்தேகம் - இது என் முணுமுணுப்பு.

எழுதினவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் ஒரு சின்னக் கேள்வி: குப்பம்மாள் அவ்வளவு ஸ்டைலாக ஆற்றிய கஞ்சியில் ஒரு முழுங்கேனும் பரீக்ஷார்த்தமாகவேனும் நம்மால் குடிக்க முடியுமா ?

“எழுதினால் குடித்தாகணுமா ? இதென்ன நியாயம் ?”

அப்போது எண்ணெய்க் கத்திரிக்காய் சாப்பிட்டதைத்தானே எழுதுகிறேன்! குடிக்காத கஞ்சியைப் பற்றி எழுதினால் விசேஷம். அனுபவித்த பதார்த்தத்தைப் பற்றி எழுதுவது குற்றம். தரக்குறைவு. வாதம் அப்படிப் போகிறது அல்லவா?

கூடவே சமர்ப்பித்துக் கொள்கிறேன். சாப்பாட்டு விஷயத்தில் மேற்கோள் காட்டிக் கட்சி ஜயிப்பதற்கு ஒன்றுமில்லை. உண்மையில் இதில் வியாஜ்யமே ஏது? சிருஷ்டியின் இயக்கமே அதுதான். அவ்வளவுதான்; பிறந்து, உண்டு, அழிவது. இடையில் நடப்பது, நிகழ்வது அத்தனையும், அடிப்படையில், விதவிதமான பெயர்களில் பொழுதின் விதவிதமான வியாபகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/197&oldid=1534300" இலிருந்து மீள்விக்கப்பட்டது