பக்கம்:பாற்கடல்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

195


இச்சமயம் பத்திரிகைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த என் பெயர் டில்லி தமிழ் மக்களின் கண்ணிலும் ஏற்கெனவே பட்டுக்கொண்டிருந்ததன் விளைவாக, நான் வந்திருக்கும் மோப்பம், என் அதிர்ஷ்டவசமாகக் கண்டு என்னை அனைத்துக்கொண்டார்கள். நான் எழுத்தாளன் என்கிற முறையைக் காட்டிலும், அவர்களுக்கும் ஏதோ ஓர் ஏக்கம் இருந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு புதுமுகத்தைப் பார்த்ததும் சொந்த மனுசாளைக் கண்டமாதிரி இருந்ததோ என்னவோ? எப்படியிருந்தால் என்ன? எனக்கு மீட்சி.

என்னோடு சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும், கோயமுத்தூரிலிருந்தும் வந்திருந்த சகாக்கள் பிரதி தினமும் அதே சுக்கா சப்பாத்தி, அதே ஆலு, அதே சாயாவில் ஆறு வார தண்டனையை அனுபவித்து நாக்கு செத்துப்போய்க் கொண்டிருக்கையில், நான் கரோல் பாக், லோடி நகர், சாணக்கியபுரி, ராம கிருஷ்ணாபுரம் என்று ஆங்காங்கே விருந்தினனாக எழுந்தருளி, வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர்க் குழம்பு, தேங்காய்த் துவையல், சாம்பார், இட்டிலி, தோசை, மிளகாய்ப்பொடி, அடையென்று திளைத்துக் கொண்டிருந்தேன். மிளகு ரஸம், பருப்புப்பொடி, கருவடாம், மணத்தக்காளி வத்தல். என்ன இருந்தாலும் உள்ளூரச் சென்னை அரித்துக் கொண்டிருந்தது.

ஸரோஜினி நகரில் ரிசர்வ் பாங்க் ஆபிஸர் ஒருவர் சாப்பிட அழைத்திருந்தார்.

இலையில் எல்லாம் பரிமாறியாகிவிட்டது. சாதம் ஒன்றுதான் பாக்கி. மாமி திடீரென மாயமாகிவிட்டாள். அவர் பொங்கி வழிகிறார். “எனக்கு அவசரமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/201&oldid=1534304" இலிருந்து மீள்விக்கப்பட்டது